"பேட்டிங் பிராக்டிஸ்" இன்னிக்குத்தான் மச்சி.. வெளுத்தெடுக்கும் விராட் கோலி.. அதிரும் மோடி ஸ்டேடியம்!

Aadmika
Nov 19, 2023,02:39 PM IST

அகமதாபாத்:  விராட் கோலி நேற்று நெட் பிராக்டிஸுக்கு வரவில்லை என்ற போதிலும் இன்று அவர் அடித்து ஆடுவதைப் பார்த்து ரசிகர்கள், நெட் பிராக்டிஸ் இன்னிக்குத்தான் போல கோலிக்கு என்று குதூகலித்து வருகின்றனர்.


விக்ரம் படத்தில் ஒரு வசனம் வரும்.. இந்த மாதிரி நேரத்துல வீரங்க எல்லாம் அடிக்கடி சொல்ற வார்த்தை என்ன தெரியுமா.. பாத்துக்கலாம்.. அப்படின்னு கமல் ஹாசன் பேசுவார்.. கிட்டத்தட்ட அதே வசனம் நம்ம இந்திய வீரர்களுக்கும் நல்லாவே பொருந்தும். காரணம், அத்தனை பேரும் தீயாக இருக்கிறார்கள். தனியாக பயிற்சியெல்லாம் தேவையே இல்லை.. சொல்லாமல் கொள்ளாமல் சுளுக்கெடுக்கும் வித்தை நம்மவர்களிடம் இப்போது நிறையவே இருக்கிறது.


விராட் கோலி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பயிற்சியில் கலந்து கொள்ளவில்லை.  இது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும் கூட விட்ரா பார்த்துக்கலாம்.. பயிற்சி எடுத்துதான் தயாராக வேண்டும் என்ற நிலையிலா விராட் கோலி இருக்கிறார் என்று தங்களைத் தாங்களே ஆறுதப்படுத்திக் கொண்டனர். அதற்கேற்ப இன்று வந்த முதல் பந்திலிருந்தே வெளுத்தெடுத்தார் விராட் கோலி. அடுத்தடுத்து 3 பவுண்டரிகளை அவர் பறக்க விட்டபோது ரசிகர்கள் குதூகலித்துக் கொண்டாடி விட்டனர். நரேந்திர மோடி ஸ்டேடியமே அதிர்ந்து போனது.




உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று பகல் 2 மணிக்கு துவங்கியது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் இந்த போட்டியில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று திரில்லிங் இருந்து கொண்டே உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இரண்டு அணிகளுமே மிகவும் பலம் வாய்ந்த அணியாக உள்ளதுதால் எந்த அணி வெற்றி பெறும், எந்த அணி இந்த முறை கோப்பையை கைப்பற்றும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


அதே சமயம் இந்திய அணி நடப்பு உலக கோப்பையில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையவில்லை. 9 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. அதனால் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்றினால் அது உலக அளவில் இந்திய அணிக்கு மிகப்பெரிய சாதனையாக அமையும். 


இறுதிப் போட்டிக்கு முன்னதாக இரு அணி வீரர்களும் வார்ம் அப் செய்து கொண்டனர். பிட்ச்  ஆய்வு ஒருபக்கம் நடந்தது. பவுலிங், பீல்டிங், பேட்டிங் பயிற்சிகளும் நடந்தது. இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் விராட் கோலி பயிற்சியில் பங்கேற்கவில்லை. இதற்கு காரணம் அரை இறுதிப் போட்டியில் அவருக்கு ஏற்பட்ட தசை பிடிப்பு தான். தசைப் பிடிப்பு காரணமாக தொடர்ந்து ஓய்வில் இருக்க ஒரு முடிவு செய்துள்ளார். இறுதிப் போட்டியில் விளையாடுவது முக்கியம் என்பதால்தான் அவர் பயிற்சிக்கு வரவில்லை. வராமல் இருந்ததும் நன்றாகப் போய் விட்டது. இன்று சும்மா படையப்பா ரஜினி மாதிரி பாயும் புலியாக மாறி ஆஸ்திரேலியா பந்து  வீச்சை பந்தாடி வருகிறார்.


இந்தியா, ஆஸ்திரேலியா இரு அணிகளுமே இதை முக்கிய போட்டியாக பார்க்கின்றனர். இருவருக்குமே இது வெவ்வேறு வழியில் மிக முக்கியமான போட்டி. இந்தியாவுக்கு 3வது கோப்பையை வெல்ல அருமைாயன வாய்ப்பு. இதை விட்டால் பல வருடம் காத்திருக்க வேண்டும். ஆஸ்திரேலியாவுக்கோ கஷ்டப்பட்டு பைனல்ஸ் வரை வந்தாச்சு.. இதில் வென்றால் 6வது கோப்பை.. அதிலும் இந்தியாவை இந்தியாவிலேயே வென்ற பெருமையும் சேரும் என்பதால் அவர்களும் வைராக்கியமாக உள்ளனர்.



வெற்றி வாய்ப்பு யாருக்கு.. "நரேந்திர மோடி" யாருக்கு சாதகம்?.. Predictions சொல்வது என்ன?