விநாயகர் சதுர்த்தி.. ஊர்களுக்குப் படையெடுக்கும் மக்கள்.. நிரம்பி வழியும் ரயில்கள், பஸ்கள்!
சென்னை: சென்னையிலிருந்து பல்வேறு ஊர்களுக்கும் மக்கள் விநாயகர் சதுர்த்தி கொண்டாட படையெடுத்து வருவதால் ரயில்கள், பஸ்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. சாலைகளிலும் வாகனப் போக்குவரத்து அதிகரித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தி திங்கள்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இந்த முறை விநாயகர் சதுர்த்திக்கு, சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் விடுமுறை கிடைத்திருப்பதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலரு் சொந்த ஊர்களுக்குப் படையெடுக்க ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பாக சென்னையிலிருந்து பலரும் சொந்த ஊர்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்குச் செல்லும் மக்கள் அதிக அளவில் கிளம்பிச் சென்று வருகின்றனர். நேற்று முதலே கூட்டம் அலை மோத ஆரம்பித்து விட்டது.
சாலை மார்க்கமாக செல்லும் வாகனங்களின் போக்குவரத்து நேற்று மாலை முதலே அதிகரித்துக் காணப்படுகிறது. சாலை மார்க்கமாக பல்வேறு வாகனங்களிலும் மக்கள் சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர். தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் மக்களின் வசதிக்காக 1250 சிறப்புப் பேருந்துகளையும் இயக்குகிறது. இதனால் மக்கள் சவுகரியமாக சொந்த ஊர்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதேபோல ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. வழக்கமான முன்பதிவு இடங்கள் நிரம்பிய நிலையில் பொதுப் பெட்டிகளிலும் மக்கள் அதிக அளவில் பயணம் செய்கின்றனர். இதனால் பொதுப் பெட்டிகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. சற்று அவுசகரியமாக இருந்தாலும் கூட மக்கள் அதைப் பொருட்படுத்தாமல் ஊர்களுக்குச் செல்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இதேபோல விமான பயணத்திற்கும் கூட மக்கள் அதிக அளவில் வருவதால் விமான நிலையத்திலும் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது. கூட்ட நெரிசல் காரணமாக மெட்ரோ ரயில் நிர்வாகமும் அதிக அளவிலான ரயில்களை இயக்குகிறது