நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
சென்னை: தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு உள்துறை அமைச்சகம் அளிக்கப்பட்ட ஒய் பிரிவு பாதுகாப்பு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார். இக்கட்சி தொடக்கத்திலிருந்து 2026 ஆம் ஆண்டு சட்டப் பேரவை தேர்தலை எதிர்கொண்டு பல்வேறு பணிகளை தீவிரமாக செய்து வருகிறார். அதேபோல் கட்சி அறிவிக்கும் கொள்கைகள் மற்றும் திட்டங்கள் மக்களிடம் சென்று சேர்வதற்காக பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறார். மேலும் கட்சியை வலுப்படுத்துவதற்காக மாநாடு, பொதுக்குழு கூட்டம், புத்தக வெளியீடு, கட்சி ஓராண்டு விழா, பரந்தூர் விசிட் என பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டு வருகிறார். இதற்காக பொது இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதனிடையே விஜய்க்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால் கடந்த மாதம் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்ட துப்பாக்கி ஏந்திய ஒய் பிரிவு பாதுகாப்பு இன்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 8 முதல் 11 பேர் கொண்ட கமாண்டோக்கள் சுழற்சி முறையில் இரவு பகலாக விஜய்க்கு பாதுகாப்பு வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள் விஜயின் அன்றாட நிகழ்வுகள் குறித்து கேட்டறிந்து அதற்கு தகுந்தாற் போல் பாதுகாப்பு அளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.