மக்களின் பேராதரவை பெற்ற.. விஜய் சேதுபதியின் மகாராஜா.. ஜூலை 12ம் தேதி.. ஓடிடியில் ரிலீஸ்!

Manjula Devi
Jul 08, 2024,02:04 PM IST
சென்னை: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 50-வது படமான மகாராஜா திரைப்படம் வரும் 12ஆம் தேதி ஓடிடியில் வெளியாக உள்ளது.

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் மகாராஜா. இவர் ஏற்கனவே குரங்கு பொம்மை என்ற படத்தை இயக்கி பிரபலமானவர். விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மகாராஜா திரைப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படம் ஆகும்.  இப்படத்திற்கு அஜெனீஸ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.



இதில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம்புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல் தேனப்பன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சிறுமி பாலியல் வன்கொடுமையை மையமாகக் கொண்டு மிகவும் விறுவிறுப்பாகவும் உருக்கமாகவும் உருவான இப்படம் கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியானது. இப்படம் வெளியாகி மக்களிடையே நல் ஆதரவை பெற்றதோடு வெற்றியும் பெற்றது. படம் வெளிவந்து வெறும் 25 நாட்களில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் ரூபாய் 100 கோடியை  தாண்டி வசூலில் சாதனை படைத்தது.

இந்த நிலையில் இப்படத்தின் உரிமையை தற்போது Netflix நிறுவனம் பெற்றுள்ளது.  ஜூலை 12-ம் தேதி தமிழ் தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியிடப்படுவதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.