ஷாருக் கானுக்கு அடுத்த இடம்.. இந்தியாவிலேயே நம்பர் 2.. இதை விட்டுட்டுப் போகப் போறாரே விஜய்!

Meenakshi
Sep 06, 2024,03:20 PM IST

டெல்லி: அதிக வரி செலுத்திய பிரபலங்களின் பட்டியலில் இந்தியாவிலேயே நம்பர் 2 இடத்தைப் பிடித்துள்ளார் விஜய். இப்படிப்பட்ட உச்ச நிலையில் இருக்கும் அவர் எல்லாவற்றையும் விட்டு விட்டு அரசியலுக்குப் போகப் போவது அவரது ரசிகர்களை பெரும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியுள்ளது.


தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஆறு வயது முதல் 60 வயது வரையிலான அனைத்துத் தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் மகத்தான இடம் பிடித்திருப்பவர் விஜய்தான். அவரது படங்களை திருவிழா போல கொண்டாடுகின்றனர். யார் என்ன சொன்னாலும், எப்படி கேலி செய்தாலும் மக்கள் கவலைப்படுவதில்லை. கொண்டாடித் தீர்த்து விடுகிறார்கள்.




லியோ படம் வந்தபோது அப்படி துவேஷமாக பலரும் அதை விமர்சித்தனர். ஆனால் படம் வசூலை வாரிக் குவித்தது. 2023ல் வெளியான படங்களில் மிகப் பெரிய வசூலை வாரிக் குவித்த படமாக லியோ உருவெடுத்தது. இப்போது கோட் படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இந்தப் படத்தையும் ஹேட்டர்ஸ் விடவில்லை. தாறுமாறாக விமர்சிக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும் படத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது.


இன்னும் ஒரே ஒரு படத்தில் மட்டுமே விஜய் நடிக்கவுள்ளார். அதன் பிறகு அவர் அரசியலுக்குப் போகப் போகிறார். இதுதான் அவரது ரசிகர்களிடையே கலவையான உணர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நடிகராக விஜய்யின் க்யூட்னெஸ்ஸை, டான்ஸை, இனிமேல் ரசிக்க முடியாதே என்ற ஏமாற்றம்தான் அது.


இந்த நிலையில், 2024ம் ஆண்டிற்கான அதிகளவில் அட்வான்ஸ் வரி செலுத்தியவர்களின் பட்டியலை ஃபார்சூன் இந்தியா வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் முதல் 10  இடங்களில் பாலிவுட் நடிகர்கள் இடம் பிடித்துள்ளனர். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சேர்ந்த நடிகர் விஜய் மட்டுமே. அதுவும் ஷாருக் கானுக்கு அடுத்து 2வது இடம் பிடித்துள்ளார். அவர் செலுத்திய வரி எவ்வளவு தெரியுமா? ரூ.80 கோடியாகும். முதலிடத்தில் உள்ள ஷாருக் கான் ரூ.92 கோடி வரியை செலுத்தியுள்ளார்.


முழுப் பட்டியல்:


1. ஷாருக்கான் - ரூ.92 கோடி

2. விஜய் - ரூ.80 கோடி 

3. சல்மான் கான் - ரூ. 75 கோடி 

4. அமிதாப் பச்சன் - ரூ. 71 கோடி 

5. வீராட் கோலி - ரூ. 66 கோடி 

6. அஜய் தேவ்கன் -  ரூ. 42 கோடி 

7. எம்.எஸ். தோனி - ரூ. 38 கோடி 

8. ரன்பீர் கபூர்- ரூ. 36 கோடி

9. சச்சின் டெண்டுல்கர் - ரூ. 28 கோடி 

10.ஹிருத்திக் ரோஷன் - ரூ. 28 கோடி 

11. கபில் சர்மா -  ரூ. 26 கோடி 

12. சௌரவ் கங்குலி ரூ. 23 கோடி

13. கரீனா கபூர் - ரூ. 20 கோடி 

14. ஷாஹித் கபூர் - ரூ. 14 கோடி 

15. மோகன் லால் - ரூ. 14 கோடி 

16. அல்லு அர்ஜுன் - ரூ. 14 கோடி 

17. ஹர்திக் பாண்டியா - ரூ. 13 கோடி

18. கியாரா அத்வானி - ரூ. 12 கோடி 

19. கத்ரீனா கைஃப் - ரூ. 11 கோடி 

20. பங்கஜ் திரிபாதி - ரூ.11 கோடி 

21. அமீர்கான் - ரூ. 10 கோடி

22. ரிஷப் பந்த் - ரூ. 10 கோடி


இந்தப் பட்டியலில் தென்னிந்தியாவைச் சேர்ந்த நடிகர்களாக விஜய், மோகன்லால், அல்லு அர்ஜூன் ஆகியோர் மட்டுமே உள்ளனர். ரஜினி, கமல் கூட இந்தப் பட்டியலில் இல்லை. இப்படிப்பட்ட சூப்பரான பொசிஷனில் உள்ள விஜய் அதை விட்டு விட்டு அடுத்த தளத்திற்கு இடம் பெயருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்