ரங்கசாமி காதில் கிசுகிசுத்த ஜெகதீப் தங்கர்.. முதல்வர் முகம் முழுக்க சிரிப்பலை .. என்னாவா இருக்கும்!

Manjula Devi
Jan 29, 2024,06:01 PM IST

புதுச்சேரி: புதுச்சேரி  வந்திருந்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர், தன்னை வரவேற்ற முதல்வர் ரங்கசாமி காதில் கிசுகிசுப்பாக ஏதோ சொல்ல முதல்வர் ரங்கசாமி முகம் முழுவதும் தெளசன்ட் வாலா பட்டாசு போல சிரிப்பால் மலர்ந்தது. அப்படி என்னதான் சொல்லியிருப்பார் ஜெகதீப் தங்கர் என்று புதுச்சேரி அரசியல் வட்டாரமே கிசுகிசுத்துக் கொண்டிருக்கிறது.


குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் புதுச்சேரிக்கு வந்திருந்தார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் வளர்ந்த பாரதம் 2047  என்ற தலைப்பில் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தங்கர் கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாற்றினார்.




முன்னதாக புதுச்சேரிக்கு வந்த தங்கரை, துணை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து இந்திய துணை குடியரசுத் தலைவர்  வளர்ந்த பாரதம் 2047 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மாணவர்கள் முன்பு உரையாற்றினார்.


இதன் பின்னர் இவருக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார். அப்போதுதான் ரங்கசாமி காதில் கிசுகிசுத்தார் ஜெகதீப் தங்கர். இன்று காலை

7 :15 மணிக்கு அரவிந்தர் ஆசிரமத்திற்கு சென்றார் குடியரசு துணைத் தலைவர்.


இதனை தொடர்ந்து காலை 8:30 மணி அளவில் புதுச்சேரி பயணத்தை முடித்துக் கொண்டு அவர் புறப்பட்டுச் சென்றார். அவரை துணை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்திய துணை குடியரசுத் தலைவரை வழியனுப்பி வைத்தனர்.


பரிக்ஷா பே சர்ச்சா 2024 நிகழ்ச்சி:




இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி உடன் மாணவர்கள் கலந்துரையாடும் பரிக்ஷா பே சச்சா 2024 நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி புதுச்சேரி அரசு கம்பன் கவியரங்கத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக துணை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.


நிகழ்ச்சியில் முதல்வர் ரங்கசாமி,சட்டப்பேரவை தலைவர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் மற்றும் பல்வேறு அரசு பள்ளிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர்.


அப்போது பள்ளி மாணவர்கள் பிரதமருடன் கலந்துரையாடும் பரிக்ஷா பே சர்ச்சா- 2024 நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் சேதாரப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மேல்நிலை கல்வி பயிலும் மாணவி  தீபஸ்ரீ காணொளி வாயிலாக பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினார்.