கோதுமை தோசை.. கொஞ்சம்.. வெங்காயம் நெல்லி மல்லி சட்னி.. இன்னிக்கு நைட் டிரை பண்ணுங்க!

Aadmika
Oct 28, 2024,03:26 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


மத்தியானம் லன்ச் முடிஞ்சாச்சு.. அடுத்து என்ன.. நைட்டுக்கு என்ன பண்ணலாம்னுதானே யோசனை.. வேறென்ன ஏதாவது டிபன் செய்ய வேண்டியதுதான்.. என்ன செய்யலாம்.. அட நைட் என்ன டின்னர் பண்றதுன்னு குழப்பமா? .. குழப்பமே வேண்டாங்க.. கோதுமை தோசை வார்த்து, கூடவே, வெங்காயம் நெல்லி மல்லி சட்னி டிரை பண்ணிப் பாருங்க.. திவ்யமா இருக்கும்!


கோதுமை தோசை :


தேவையான பொருட்கள் :


கோதுமை மாவு - 2 கப்

பெரிய வெங்காயம் - பொடியாக நறுக்கியது 1 கப்

பச்சை மிளகாய் - 2 பொடியாக நறுக்கியது

சீரகம் - 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை, மல்லி - ஒரு கைப்பிடி நறுக்கியது


செய்முறை : 


* கோதுமை மாவை தண்ணீர், தேவையான அளவு உப்பு சேர்த்து கட்டி படாமல் கலக்க வேண்டும்.


* பிறகு வெங்காயம், பச்சை மிளகாய், சீரகம், கறிவேப்பிலை, மல்லி சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலக்கி, தோசை ஊற்ற வேண்டும்.


* எண்ணெய் அல்லது நெய் விருப்பத்திற்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளலாம்.




நெல்லி மல்லி சட்னி :


தேவையான பொருட்கள் :


வெங்காயம் - 10 (சிறிய வெங்காயம்)

பூண்டு - 6 பல்

வர மிளகாய் - 3

சீரகம் - 1/2 ஸ்பூன்

தக்காளி - 3

பெரிய நெல்லிக்காய் - பாதி

மல்லித்தழை - 1 கைப்பிடி

தேங்காய் துருவல் - 2 ஸ்பூன்

நல்லெண்ணெய் - 2 ஸ்பூன்

கடலை பருப்பு - 1/2 ஸ்பூன்

உளுந்தம் பருப்பு - 1/2 ஸ்பூன்

உப்பு - தேவைக்கு ஏற்ப


செய்முறை :


* கடாயில் எண்ணெய் ஊற்றி, கடலை பருப்பு, உளுந்தம் பருப்பு, வரமிளகாய், சீரகம், வெங்காய்ம், பூண்டு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.


* பருப்பு பொன்னிறமாக வதங்கிய பிறகு நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.


* அடுப்பை அணைத்து விட்டு, அந்த சூட்டில்  தேங்காய் துருவல், நெல்லிக்காய், மல்லித்தழை சேர்த்து கிளற வேண்டும்.


* இந்த கலவை நன்கு ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து அரைக்க வேண்டும். 


* உப்பு, புளி, காரம் தேவைக்கும், சுவைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப கூட்டி, குறைத்து சேர்த்துக் கொள்ளலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்