துணிவுடன் ஆட்டம் காட்டிய 'வாரிசு'.. 7 நாட்களில் 210 கோடி.. ரசிகர்கள் செம குஷி!

Baluchamy
Jan 18, 2023,04:14 PM IST
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் 7 நாட்களில் 210 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படத்தின் தயாரிப்பிலார் தில்ராஜ் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.



நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தை தெலுங்கு  இயக்குநர் வம்சி இயக்க தயாரிப்பாளர் தில்ராஜின் வேங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.

நடிகை ராஷிக்கா, சங்கீதா, சம்யுக்தா, ஷாம், சரத்குமார், பிரகாஷ் ராஜ் மற்றும் குஷ்பு உள்ளிட்ட மிக பெரிய திரை நட்சத்திரங்களின் நடிப்பில் அக்ஷன் மற்றும் குடும்ப படமாக எடுக்கப்பட்டது.

இப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. பீஸ்ட் படத்தின் தோல்வியை சரிக்கட்டும் விதமாக இம்முறை விஜய்யின் 'வாரிசு' திரைப்படம் அஜித்தின் 'துணிவு' திரைப்படத்துடன் களம் இறங்கியது.

படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்னரே தல பெருசா? தளபதி பெருசா? என ரசிகர்கள் போட்டி போட்டு  கொண்டிருந்தனர். மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் 'வாரிசு' திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது.

முதல் நாள் முதல் ஷோவை பார்த்தே ஆகவேண்டும் என விஜய் ரசிகர்கள் திரையரங்குகளை மொய்த்துவிட்டனர். மேலும் முதல் நாள் முதல் ஷோ டிக்கெட் பல திரையரங்குகளில் 1000 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டது.

வாரிசு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்திய நிலையில் ரசிகர்கள் மத்தியில் மீண்டு சலசலப்பு ஏற்பட்டது. வசூலில் யார் டாப் என்பதை பார்ப்போம் என அஜித், விஜய் ரசிகர்கள் மீண்டும் போட்டா போட்டி சண்டையை ஆரம்பித்துவிட்டனர்.

இருபடங்களின் தயாரிப்பாளர்கள் அமைதியக இருந்தாலும் ரசிகர்கள் முதல் நாள் வசூலில் நாங்க தான் டாப்! நாங்க தான் டாப்! என போட்டிபோட்டு கொண்டிருந்தனர்.

வார நாட்களில் வெளியான வாரிசு திரைப்படம் தொடர்ந்து பொங்கல் பண்டிகை விடுமுறையையொட்டி கலெக்ஷனை அள்ளியது. இந்த நிலையில் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் வாரிசு படத்தின் வசூல் எவ்வளவு என்ற தகவலை பகிர்ந்துள்ளார்.

அதில், உலகம் முழுவதும் 'வாரிசு' திரைப்படம் வெளியாகி 7 நாட்களில் 210 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். கலெக்ஷன் எவ்வளவு என குழம்பிப் போயிருந்த விஜய் ரசிகர்கள்கு தயாரிப்பாளர் தில்ராஜின் இந்த அறிவிப்பை கண்டு செம ஹாப்பி ஆகிவிட்டனர். அதேசமயம், துணிவு படமும் ரூ. 200 கோடி வசூலைத் தாண்டி விட்டதாக அந்தப் பக்கத்திலிருந்தும் செய்திகள் வருகின்றன.

எப்ப இந்த பஞ்சாயத்து ஓயும்ணு தெரியலையே!