மே 10 -இன்று யாரை வழிபட வேண்டும் .. பஞ்சாங்க பலன் என்ன?
இன்று மே 10, 2023 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 27
தேய்பிறை, கீழ்நோக்கு நாள்
மாலை 03.34 வரை பஞ்சமி, பிறகு சஷ்டி திதி உள்ளது. மாலை 05.50 வரை பூராடம் பிறகு உத்திராடம் நட்சத்திரம் உள்ளது. காலை 05.54 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
கணக்கு கற்பதற்கு, கிணறு வெட்டுவதற்கு, வாகனம் வாங்குவதற்கு, கால்நடைகள் வாங்குவதற்கு ஏற்ற நாள்
யாரை வழிபட வேண்டும் ?
மகாலட்சுமியை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும். தேய்பிறை பஞ்சமி திதி என்பதால் வாராஹி அம்மனை வழிபட அனைத்து துன்பங்களும் விலகும்.