வாழ்க்கை ஓவியத்தை.. தேடித் தொலைந்து.. பூத்து சிலிர்த்து நிற்கின்றேன்.. உன் பார்வையின்.. தீண்டலுக்காக
- தேவி
உன் மெளனங்களை அணைத்துக் கொண்டு
பார்வைகளில் திளைத்துக் கொண்டு
உன் முச்சினை சுவாசித்து கொண்டு
விரல் நுனியில் ஒளிந்து கொண்டு
உன் இதயத்தை உரசிக் கொண்டு
உன் சிரிப்பினில் மூழ்கிக் கொண்டு
கருவிழிகளில் நுழைந்து கொண்டு
இதழ்களில் தேன் வார்த்தைகளை தூவி கொண்டு
காதலின் மேகங்களை தழுவி கொண்டு
உயிரினை மாற்றிக் கொண்டு
புது உலகினை தேடிக் கொண்டு
காற்றினில் மிதந்து கொண்டு
காலத்தினை ரசித்துக் கொண்டு
காதலின் ஓசையைக் கேட்டுக் கொண்டு
மனதின் விருப்பத்தை மறைத்துக் கொண்டு
மாற்றங்களை ஏற்றுக் கொண்டு
மன ஓட்டத்தை படித்துக் கொண்டு
மலரினை கையில் ஏந்தி கொண்டு
மயக்கத்தினை பார்வையில் கடத்திக் கொண்டு
வானவில்லின் பார்வையில் மிதந்து கொண்டு
இமைகளின் இடையில் சிக்கிக் கொண்டு
உன் தேடலில் தொலைந்து கொண்டு
உன் அழகினில் மடிந்து கொண்டு
வாழ்க்கையின் ஓவியத்தை
உன் பார்வையில் தேடி தொலைந்து
பூத்து சிலிர்த்து நிற்கின்றேன்
உன் பார்வையின்
தீண்டலுக்காக....!