கலையின் கவிதைகள்.. வேண்டும் காதல்..!

Su.tha Arivalagan
Feb 14, 2025,03:00 PM IST

- கவிஞாயிறு இரா. கலைச்செல்வி


காதலில் நித்தம் புனிதம் வேண்டும் .!

கபடங்கள் இல்லா தோழமை வேண்டும்.!

கண்ணியம் நிறைந்த காதல் வேண்டும்.!

காமம் கலக்காத காதல் வேண்டும்..!!


விழிகளில் கண்ணியம் காக்க வேண்டும்.!

அன்பின் வழியில் அக்கறை வேண்டும் .!

ஆணவம் இல்லா அன்பு வேண்டும்.!

 உணர்வினை மதிக்கும் மனம் வேண்டும்.!!




நேசம் கொண்ட புரிதல் வேண்டும் .!

நேர்மை கொண்ட வழித்துணை வேண்டும் .!

புரிந்து பழக நல்ல நட்பு வேண்டும்..!

மரணம்வரை காதல்செய்யும் மனம் வேண்டும்.!!


(எழுத்தாளர்  பற்றி... சிவகங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, சென்னையில் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அரசு உயர் அதிகாரி ஆவார். கணவர் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற தலைமை விஞ்ஞானி. எழுத்தின் மீதும், வாசிப்பின் மீதும் தீராக் காதல் கொண்ட எழுத்தாளர் இரா. கலைச்செல்வி, நீண்ட காலமாக எழுதி வருகிறார். அகில இந்திய வானொலியில் இவரது பல கதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சொந்தக் குரலிலேயே தனது கதைகளை அவர் வாசித்துள்ளார். நிலாமுற்றம் உள்ளிட்ட பல நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அதிக அளவில் எழுதி வருகிறார். கதைகள் தவிர, கவிதைகளையும் அதிகம் எழுதி வருபவர், யோகா உள்ளிட்ட பல்வேறு கலைகளையும் கற்றுத் தெளிந்தவர். உளவியலில் முதுகலைப் பட்டமும் பெற்றவர்)