குண்டர்கள் ஓடி விளையாடிய.. உத்தரப்பிரதேசம்.. வேகமாக வளர்கிறது.. மோடி பெருமிதம்

Su.tha Arivalagan
Feb 26, 2023,04:12 PM IST
லக்னோ: ஒரு காலத்தில் ரவுடிகள், சமூகவிரோதிகளின் கூடாரமாக திகழ்ந்த உத்தரப் பிரதேச மாநிலம் இன்று வேகமான வளர்ச்சியைப் பெற்று முன்னேறி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 9055 சப் இன்ஸ்பெக்டர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி லக்னோவில் நடைபெற்றது. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் வீடியோ உரை ஒளிபரப்பப்பட்டது.



அந்த வீடியோ உரையில் நரேந்திர மோடி பேசியிருப்பதாவது:

ஒரு காலத்தில் மாபியா கும்பல்களுக்கும், சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கும் பெயர் பெற்றிருந்தது உத்தரப் பிரதேசம். இன்று சிறந்த சட்டம் ஒழுங்கு இங்கு பேணிக்காக்கப்படுகிறது. வேகமாக முன்னேறி வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் முகமே மாறிப் போயிருக்கிறது. 

தற்போது 9000 குடும்பங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளோம். மாநில காவல்துறை புதிய நியமனங்கள் மூலம் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.  2017ம் ஆண்டு இங்கு பாஜக ஆட்சிக்கு வந்தது முதலே உத்தரப் பிரதேச காவல்துறையில் இதுவரை 1.5 லட்சம் புதிய நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று எனக்கு  சொல்லப்பட்டது. வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. மக்களுக்கு நிம்மதியான மன நிலையும், பாதுகாப்பான சூழ்நிலையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியே இதற்குக் காரணம்.

Athulya Ravi.. அம்மு குட்டியே.. பட்டுக்குட்டியே.. தங்கக் கட்டியே.. அடடா மயக்கிட்டியே!


சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும். முதலீடுகள் அதிகரிக்கும். தொழில் செய்வதற்கான சூழல் உருவாகும்.  உத்தரப் பிரதேசத்தில் பலமாதங்களாக வேலைவாய்ப்பு முகாம்கள் வாரந்தோறும் நடத்தப்படுகின்றன.  இது பாராட்டுக்குரியது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதையெல்லாம் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சி தருகிறது.

வேலைவாய்ப்பு கிடைத்துள்ள அனைவருக்கும், இந்த மாநிலத்தின் எம்.பியாக நான் சொல்லிக் கொள்வது ஒன்றுதான்.. வேலை கிடைத்து விட்டதே என்று உங்களுக்குள் இருக்கும் மாணவனை துரத்தி விட்டு விடாதீர்கள். அந்த உணர்வு இருந்து கொண்டே இருக்க வேண்டும். தொடர்ந்து கற்றுக் கொண்டே இருக்க வேண்டும். அதுதான் உங்களை மேம்பபடுத்தும். அது வளர்ச்சிக்கும் அவசியம். வாழ்க்கையில் புதிய உயரங்களைத் தொட அதுவே உதவும் என்றார் பிரதமர் மோடி.