குரங்கம்மை நோய்.. 18 முதல் 44 வயதுடைய ஆண்களைத்தான் அதிகளவில் தாக்குகிறதாம்!
டெல்லி: 18 முதல் 44 வயதுடைய ஆண்களையே பெரும்பாலும் குரங்கம்மை தாக்குகிறது. பாலியல் உறவு மூலமாகவே குரங்கம்மை தொற்று அதிகம் பரவுவதாகவும் எச்சரிக்கை விடுத்து மத்திய அரசு மாநிலங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோயாகும். இந்நோய் எம்பாக்ஸ் என்றும் அழைக்கப்படுகிறது. பொதுவாக இந்த நோயின் பாதிப்பு ஆரம்பத்தில் லேசாக ஆரம்பித்து இறுதியில் உயிரை பறிக்கும் தன்மையுடன் இருந்து வருகிறது. இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. 2022ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான, காங்கோ நாட்டில்தான் முதலில் குரங்கு அம்மை நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குரங்கம்மை நோய் தொற்றின் அறிகுறிகள்:
குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் காய்ச்சல் ஏற்படுமாம். அதன்பின்னர் உடலில் தடிப்புகள் ஏற்பட்டு உடல் முழுவதும் கொப்புளம் கொப்புளமாக தோன்றுகிறது. இந்த கொப்புளம் தலையில் இருந்து உள்ளங்கால் வரை பரவும் தன்மை உடையது. தலைவலி, தசை வலி, உடல் சோர்வு, தொண்டை வலி மற்றும் இறுமல் இருக்குமாம்.
மேலும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள், ஓரின சேர்க்கை கொள்ளும் ஆண்கள் ஆகியோரை கடுமையாக தாக்குகிறது. நீண்ட நாள் நெருங்கிய தொடர்பில் உள்ளவர்களின் சுவாச துளிகள் வாயிலாகவும், மனிதர்களில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்தியாவில் பாதிப்பு இல்லை:
குரங்கம்மை பாதிப்பு இந்தியாவில் இதுவரைக்கும் யாருக்கும் கண்டறியப்படவில்லை. அண்மையில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ள ஒரு நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்த ஒரு ஆணுக்கு இருக்கும் என சந்தேகிக்கப்பட்டது. அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்.
மத்திய அரசு வெளியிட்ட கடிதத்தில்
இந்நிலையில், குரங்கம்மை நோய் பரவுதல் தடுப்பு தொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
*அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் குரங்கம்மைக்கு ஐசியு பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
* நோய் தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.
* மாவட்ட மருத்துவமனைகளில் சுகாதார ஆயத்த நிலை குறித்து மூத்த அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
* குரங்கம்மை நோய் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் மீது தனி கவனம் செலுத்த வேண்டும்.
* மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தும் வசதிகளை ஆய்வு செய்ய வேண்டும்.
* மருத்துவமனைகளில் தேவையான உபகரணங்கள், மருந்துகள் இருப்பில் உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
* குரங்கம்மை நோய் சூழலை மத்திய சுகாதார அமைச்சகள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நோய்ப் பரவல் அதிகரித்து வருவதால், உலக நாடுகள் இதை சமாளிக்க ஆயத்தமாகுமாறு உலக சுகாதார நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதம் கேட்டுக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்