பட்ஜெட் 2024 : தனிநபர் வருமான வரியில் மாற்றம்...ரூ.3 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினால்தான் வரி!
டில்லி : மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல புதிய வருமான வரி திருத்தங்கள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக தனிநபர் வருமான வரியில் மாற்றம் ஏதும் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் வருமான வரியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரூ.5 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டுமே 5 சதவீதம் வருமான வரி என்ற நிலை இருந்து வருகிறது. ஆனால் இனி ரூ.3 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கினாலே 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும் என மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
புதிய வருமான வரி விகிதங்கள் :
வருட வருமானம் ரூ. 3 லட்சம் வரை - வரி இல்லை
ரூ. 3 முதல் 7 லட்சம் - 5%
ரூ. 7 முதல் 10 லட்சம் - 10%
ரூ. 10 முதல் ரூ. 12 லட்சம் - 15%
ரூ. 12 முதல் ரூ. 15 லட்சம் - 20%
ரூ. 15 லட்சத்திற்கு மேல் - 30%
புதிய வருமான வரி வரம்பினால் மாத சம்பளதாரர்களுக்கு ரூ.17,500 வரை மிச்சமாவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நான்கு கோடி சம்பளதாரர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் இதனால் பயடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Standard deduction அதாவது நிரந்தர வருமான வரிக் கழிவு ரூ.50,000 ல் இருந்து ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.