வரலாறு படைத்த உகாண்டா.. டி20 உலகக் கோப்பைப் போட்டிக்குத் தகுதி பெற்று அசத்தல்!

Su.tha Arivalagan
Nov 30, 2023,06:53 PM IST

வின்ட்ஹோக், நமீபியா:  நமீபியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை ஆப்பிரிக்க அணிக்கான தகுதிப் போட்டியில் அட்டகாசமாக வென்ற உகாண்டா அணி, ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் 2024 தொடருக்குத் தகுதி பெற்றது.


இதுவரை, ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தகுதி பெற்ற 5வது ஆப்பிரிக்க அணி உகாண்டா என்பது குறிப்பிடத்தக்கது.




ஆப்பிரிக்க தகுதிப் போட்டித் தொடரில் முதல் இரு இடங்களைப் பெறும் அணி ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடருக்குத் தகுதி பெறும். அந்த வகையில் நமீபியாவும், உகாண்டாவும் தகுதி பெற்றுள்ளன.  உகாண்டா அணி ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும்.


டி20 உலகக் கோப்பை 2024 தொடர் மேற்கு இந்தியா மற்றும் அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதில் மொத்தம் 20 அணிகள் கலந்து கொள்ளவுள்ளன.