300 ஏக்கரில் உருவாகும் "நகர் திறன் பூங்கா".. உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆய்வு

Meenakshi
Sep 25, 2023,03:51 PM IST

கிருஷ்ணகிரி: இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்  கிருஷ்ணகிரி மாவட்டம்  சூளகிரி - பீலாளம் கிராமத்தில், 300 ஏக்கரில் தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின், வருங்கால நகர் திறன் பூங்கா அமையவுள்ள இடத்தை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.




கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சூளகிரி ஊராட்சி ஒன்றியம் சென்னப்பள்ளி ஊராட்சியில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக ரூ.26 கோடியே 81 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டு வரும் காய்கறி முதன்மை பதப்படுத்தும் குளிர்பதன கிடங்கு கட்டுமான பணிகளையும், மருதாண்டப்பள்ளி சூளகிரி சிப்காட் வளாகத்தில் நவீன மின்வாகன பூங்கா அமையவுள்ள இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.




முக்கியமாக சூளகிரி - பீலாளம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும் வருங்கால நகர் திரன் பூங்கா அமையவுள்ள இடத்தையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுதவிர கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரகத்தில் பழங்குடியினர் வகுப்பை சேர்ந்தவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா மற்றும் சாதிச்சான்றிதழ்களை வழங்கினார்.