உடம்பு ஏறிட்டே போகுதா.. சாப்பாட்டோடு நெய் சேர்த்துக்கங்க பிரண்ட்ஸ்.. ஜம்முன்னு வெயிட் குறையும்!
சென்னை: நானும் என்னென்னவோ செய்றேன் பாஸ்.. உடம்பு கொஞ்சம் கூட குறையவே மாட்டேங்குது என்று பலரும் அலுத்துக் கொள்வதைப் பார்த்திருப்போம்.. இதுக்கு ஏங்க இவ்வளவு அலுத்துக்கணும்.. நம்ம வீட்டுலேயே அதற்கான நிவாரணம் வெயிட்டிங் பாஸ்.. அதுவும் கிச்சன்லேயே இருக்கு.. அப்படி இருக்கும்போது கவலை எதுக்கு.
நம்முடைய வீட்டு சமையல் அறையை நாம் இப்போது வெறுமனே சமையல் செய்யும் அறையாகத்தான் பார்க்கிறோம். ஆனால் ஒரு காலத்தில் அது மெடிக்கல் ஷாப் போலவும் நம்முடைய தாத்தா பாட்டிகளால் பாவிக்கப்பட்டது என்பதை நாம் மறந்து விட்டோம். உடம்புக்கு ஏதாவது என்றால் அப்போதெல்லாம் யாருமே டாக்டரிடம் ஓட மாட்டார்கள். மாறாக கிச்சனுக்குள் புகுந்துதான் எதையாவது எடுத்து, கசாயம் உள்ளிட்டவற்றை செய்து நம்மை சரி செய்தார்கள். இப்போது அதற்கெல்லாம் வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை.. ஏன்னா நமக்கு அதெல்லாம் செய்யத் தெரியாது அல்லது சொல்லித் தர ஆள் இல்லை.
சரி அதை விடுங்க.. வெயிட் லாஸ் செய்வதற்கு, சிம்பிளா ஒரு டிப்ஸ் பார்க்கலாமா.. அது வேற ஒன்னும் இல்லைங்கை நெய்தான் அது.
வெண்ணையை உருக்கி எடுத்தால் வருவதுதான் நெய். நமது சாப்பாட்டில் முக்கிய பங்கு வகிப்பது நெய். நெய் இல்லாமல் பலர் சாப்பிடுவதே இல்லை. சோறில் அதை சேர்த்துக் கொள்ளலாம். தோசை சுடும்போது பயன்படுத்தலாம். இட்லிக்கு பொடி வைத்து சாப்பிடும்போதும் நெய் பயன்படுத்தலாம்.. இப்படி எல்லா இடங்களிலும் நெய் நம்முடன் கலந்திருக்கிறது. ஆனால் பலருக்கு இருக்கும் ஒரு பொதுவான சந்தேகம் என்னன்னா, நெய் அதிகம் சாப்பிட்டால் உடம்புல கொழுப்பு சேருமா, வெயிட் அதிகரிக்குமா என்பதுதான்.. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமே ஆனாலும் அது நஞ்சுதான். அந்த வகையில் நெய்யையும் சரியான அளவில் முறையாக பயன்படுத்தினால் நமது உடல் எடைக் குறைப்புக்கு அது கை கொடுக்கும் என்பதுதான் உண்மை.
நெய்யில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. ஆன்டிஆக்சிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. அது போக ஆன்டி இன்பிளமேட்டரி பொருட்களும் கலந்துள்ளன. எனவேதான் இதை வெயிட் லாஸுக்கு சிறந்த விஷயமாக டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். சரி நெய் எப்படியெல்லாம் நமக்கு உதவுதுன்னு பார்க்கலாம் வாங்க.
ஜீரணத்திற்கு உதவும் நெய்: நெய்யில் புட்ரிக் அமிலம் உள்ளது. இது ஒரு வகையான கொழுப்பு அமிலம்தான். இது நமது குடல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. நமது உடலில் சீரான, சரியான ஆரோக்கியமான ஜீரண அமைப்பு இருக்க வேண்டும். அது உடல் ஆரோக்கியத்திற்கும், எடை பராமரிப்புக்கும் மிக மிக அவசியம். தேவையில்லாத கழிவுகளை முறையாக வெளியேற்றி விட்டாலே உடம்பு ஆரோக்கியமாக இருக்கும். நெய்யை பயன்படுத்தும்போது நமது ஜீரணி சக்தி சரியாகிறது. ஜீரணம் முறையாக நடக்க உதவுகிறது. உடம்புக்குத் தேவையான சத்துப் பொருட்களை உள்ளிழுக்க நெய் உதவுகிறது.
கொழுப்பில் கரையக் கூடிய விட்டமின்கள்: நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதில் நெய் முக்கியப் பங்கு வகிக்கிறது. இது கொழுப்பில் கரையக் கூடிய விட்டமின்களை உள்ளடக்கியது. அதாவது விட்டமின் ஏ, இ, டி ஆகியவை நெய்யில் உள்ளன. நமது உடலின் உறுப்புகள் சீராக இயங்குவதற்கு இந்த விட்டமின்கள் அவசியம். அது மட்டுமல்ல, சரும நலம், கால்சியம் சத்து உள்ளிட்டவற்றுக்கும் இந்த விட்டமின்கள் முக்கியம். இவை நெய் மூலம் நமக்கு எளிதாக கிடைக்கிறது. இதுவும் கூட நமது உடல் ஆரோக்கியத்தை சீராக்கி, எடைக் குறைப்புக்கும் வித்திடுகிறது.
தைராய்டு பிரச்சினைக்கு நல்லது: நம்மில் பலருக்கு தைராய்டு பிரச்சினை இருக்கும். அப்படி பிரச்சினை உள்ளவர்களுக்கு உடல் எடை அதிகரிப்பும் ஒரு பிரச்சினையாக கூடவே இருக்கும். இதனால் எடைக் குறைப்பு என்பது அவர்களைப் பொறுத்தவரை கனவாகவே இருக்கும். நெய்யில் அயோடின் சத்து உள்ளது. எனவே சாப்பாட்டுடன் நெய்யையும் எடுத்துக் கொள்ளும்போது அவர்களுக்கு கூடுதல் அயோடின் சத்து கிடைக்கிறது. இது தைராய்ட் ஹார்மோனை சரி செய்து அதை சீராக சுரக்க வைக்க உதவும். மேலும் தைராய்டு சீராக சுரக்க உதவும் மீடியம் செயின் கொழுப்பு அமிலங்களையும் நெய் கொடுப்பதால் கூடுதல் பலனும் கிடைக்கும்.
பக்க விளைவுகளும் உண்டு.. கவனம்: நெய்யில் கலோரியும் அதிகம், கொழுப்பும் அதிகம். எனவே நெய் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைத்தாலும் கூட, அதை அதிக அளவில் பயன்படுத்துவது ஆபத்தானது. அதிக அளவில் நெய்யை பயன்படுத்தும்போது அது உடல் எடைக் குறைப்புக்குப் பதில் எடையை அதிகரிக்க வைக்கும் அபாயம் உள்ளது. எனவே இதை தேவையான அளவுக்கு மட்டுமே பயன்படுத்துவது நல்லது. அதேபோல எல்லோரும் நெய் சாப்பிட முடியாது. குறிப்பாக கல்லீரல் பிரச்சினை உள்ளவர்கள், கொலஸ்டிரால் பிரச்சினை உள்ளவர்கள், நெய்யை கவனமாக எடுப்பது முக்கியம்.
நெய்யை பெரும்பாலும் சமையலில் சேர்த்து சாப்பிடுவது நல்லது. உதாரணத்திற்கு சப்பாத்தி, சூப்கள், பருப்பு உள்ளிட்டவற்றில் சேர்த்து சாப்பிடலாம். வெறும் நெய்யை அப்படியே சாப்பிடுவது நல்லது இல்லை. நெய்யை அதிக அளவில் பயன்படுத்த விரும்பினால் உரிய நிபுணர்களின் அறிவுரையைப் பெற்று பயன்படுத்தத் தொடங்குவது நல்லது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்