டிவிட்டரிலிருந்து மேலும் பல ஊழியர்கள் டிஸ்மிஸ்... சிங்கப்பூர், டப்ளினில் அதிரடி!

Su.tha Arivalagan
Jan 08, 2023,09:40 AM IST
சிங்கப்பூர்: டிவிட்டர் நிறுவனத்தின் சிங்கப்பூர் மற்றும் டப்ளின் அலுவலகத்திலிருந்து 12க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இரவோடு இரவாக வேலையை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதலே,சிக்கணம் மற்றும் செலவுக் குறைப்பு நடவடிக்கையில் அந்த நிறுவனம் இறங்கியுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 3700 ஊழியர்கள் நீக்கப்பட்டனர். இந்த நிலையில் சிங்கப்பூர், டப்ளின் கிளைகளைச்சேர்ந்த 12க்கும் மேற்பட்டோரை பணியிலிருந்து நீக்கியுள்ளது டிவிட்டர்.



இவர்கள் அனைவரும் trust and safety அணிகளைச் சேர்ந்தவர்கள். அவதூறு கருத்துக்கள், துன்புறுத்தல் ஆகியவற்றை மாடரேட் செய்யும் முக்கியமான பணிகளைச் செய்து வரும் அணி இது என்பது குறிப்பிடத்தக்கது. நீக்கப்பட்டவர்களில் முக்கியமானவர்கள் - நூர் அஸார் பின் அயூப், ஆசியா பசிபிக் பிராந்திய trust and safety அணியின்  தலைமைப் பொறுப்பில் இருந்தவர். இன்னொருவர் சீனியர் டைரக்டர் அனால்சியா டோமினிக்ஸ்.

ஆனால் இந்த பணி நீக்கத்தால் trust and safety அணியின் பணி எந்த வகையிலும் பாதிக்காது என்று டிவிட்டர் துணைத் தலைவர் எல்லா இர்வின் கூறியுள்ளார். இதுகுறித்து அவர்கூறுகையில், இந்த அணியில் ஆயிரக்கணக்கான பணியாளர்கள் உள்ளனர். சிலர்தான் நீக்கப்பட்டுள்ளனர். எனவே பணிகள் பாதிக்காது என்றார்.