இன்ஸ்டாகிராமை விட்டு வெளியேறினார்.. டிவிட்டர் நிறுவனர் ஜேக் டார்சி!

Su.tha Arivalagan
Aug 20, 2023,04:28 PM IST
கலிபோர்னியா: டிவிட்டர் நிறுவனரான ஜேக் டார்சி, இன்ஸ்டாகிராமை விட்டு விலகிவிட்டார். கடந்த 12 வருடமாக அவர் இன்ஸ்டாகிராமை பயன்படுத்தி வந்தார்.

டிவிட்டரை உருவாக்கியவர் தான் ஜேக் டார்சி. டிவிட்டரின் முன்னாள் தலைமை செயலதிகாரியாகவும் இருந்தவர். இந்த  நிலையில் மெட்டாவின் இன்ஸ்டாகிராம் கணக்கை அவர் டெலிட் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் போட்டுள்ள டிவீட்டில், கடந்த 12 வருடமாக பயன்படுத்தி வந்த இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்கி விட்டேன். இன்ஸ்டாகிராமின் ஆரம்ப கால உறுப்பினர்களில் நானும் ஒருவன் என்று அவர் கூறியுள்ளார்.



பேஸ்புக்கிலும் கூட அவர் கிடையாது. மெட்டாவின் எல்லா வகையான சமூக வலைதளப் பக்கங்களிலிருந்தும் தான் விலகி விட்டதாகவும் ஜேக் டார்சி கூறியுள்ளார்.  வாட்ஸ்ஆப்பில் கூட இவர் இல்லையாம்.

ஜேக் டார்சியின் இந்த அறிவிப்புக்கு, எலான் மஸ்க்கும் ரியாகஷன் காட்டியுள்ளார்.எப்படி தெரியுமா.. ஃபயர் எமோஜி போட்டு வரவேற்றுள்ளார். ஏற்கனவே மெட்டாவுடன் ஒரு வாய்க்கால் சண்டையில் ஈடுபட்டிருப்பவர் எலான் மஸ்க் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில், மெட்டாவை தலை முழுகுவதாக டிவிட்டரின் நிறுவனர் அறிவித்திருப்பதை அவர் வரவேற்காமல் இருப்பாரா என்ன.

என்னதான் டிவிட்டர் தற்போது ஜேக் வசம் இல்லாவிட்டாலும் கூட அவர் டிவிட்டருக்கு விசுவாசமாகவே இருந்து வருகிறார். டிவிட்டருக்குப் போட்டியாக திரெட்ஸை மெட்டா அறிமுகப்படுத்தியபோது கூட அவர் அதை ஆதரிக்கவில்லை. மேலும் திரெட்ஸில் தன்னை பாலோ செய்யுமாறு மார்க் ஜக்கர்பர்க், டார்சிக்கு விடுத்த அழைப்பையும் கூட அவர் நிராகரித்து விட்டார் என்பது நினைவிருக்கலாம்.