"2023ல் ஒரு பாப்பா.. 2024ல் இன்னொரு பாப்பா".. வெவ்வேறு ஆண்டுகளில்.. பிறந்த இரட்டைக் குழந்தைகள்!!
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த தம்பதிகளுக்கு ஒரே பிரசவத்தில் வெவ்வேறு ஆண்டுகளில் வெவ்வேறு நாட்களில் இரட்டை குழந்தைகள் பிறந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதிலும் அவ்வப்போது ஏதாவது ஒரு சில ஆச்சரியங்களும், அரிதான நிகழ்வுகளும் நடக்க தான் செய்கின்றன. இரட்டை இழந்தைகள் என்பது அரிதான நிகழ்வு தான். ஆனால் ஒரு இரட்டைக் குழந்தை வித்தியாசமாக பிறந்து அனைவரையும் மகிழ்ச்சி பிளஸ் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதாவது 2023ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி ஒரு குழந்தையும், ஜனவரி 1ம் தேதி ஒரு குழந்தையும் பிறந்து டாக்டர்களையும், பெற்றோரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த பில்லி ஹம்ப்ரே - ஈவ் தம்பதிகளுக்குத்தான் ஒரே பிரசவத்தில் வெவ்வேறு ஆண்டுகளில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரே பிரசவத்தில் பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு வெவ்வேறு ஆண்டு பிறந்த நாள் என்பது தான் ஆச்சரியம் கலந்த சுவாரஸ்ய சம்பவமாக உள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஈவ் நிறை மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். பிரசவ வலி ஏற்பட்டதால் கடந்த மாதம் 31ம் தேதி மருத்துமனையில் சேர்க்கப்பட்டார். அதைத் தொடர்ந்து அன்று இரவு 11.48 மணிக்கு அவருக்கு ஒரு அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னர் 12 மணி தாண்டிய நிலையில், அதாவது 2024ம் ஆண்டு பிறந்த நிலையில், மீண்டும் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. வெவ்வேறு ஆண்டுகளில் இரட்டை குழந்தை பிறந்ததால் அங்கிருந்தவர்கள் ஆச்சிரியத்தில் திகைத்தனர்.
இந்த சம்பவம் இரட்டை குழந்தைகளின் பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியதாக தெரிவித்தனர். அந்த தம்பதிகள் ஒரு குழந்தைக்கு எஸ்ரா என்றும், மற்றொரு குழந்தைக்கு எசேக்கியேல் எனவும் பெயர் சூட்டி உள்ளனர்.