விஜய் சொன்ன கவிதை வரிகள் சூப்பர்.. ஆனால் கவிஞரோட பெயரைத்தான் மாத்தி சொல்லிட்டார்!

Su.tha Arivalagan
Mar 28, 2025,04:56 PM IST

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் இன்று தனது கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் பேசியபோது ஆங்கில கவிதை வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார். அப்போது கவிஞரின் பெயரை மாற்றிக் கூறியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழுக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய விஜய் பேச்சில் இதுவரை இல்லாத அளவுக்கு பாய்ச்சலும், வேகமும் இருந்தது. அனல் பறக்கப் பேசினார் விஜய்.


விஜய் பேசும்போது  இடையே ஆங்கிலத்திலும் புகுந்து விளையாடினார். அவரது தொடர்ச்சியான ஆங்கிலப் பேச்சைக் கேட்டு தொண்டர்கள் குதூகலித்தனர். பின்னர் தனது பேச்சையும் ஆங்கில கவிதை வரிகளோடு அவர் முடித்தார்.




அவர் பேச்சை முடிக்கும்போது, வில்லியம் பிளேக் எழுதிய, men may come and men may go, But I go on forever என்ற வரிகளோடு முடிக்கிறேன் என்று கூறினார்.


இதுவரைக்கும் எல்லாம் சரியாக இருந்தது. ஆனால் அந்தக் கவிதை வரிகளை எழுதிய ஆசிரியரின் பெயர்தான் தவறுதலாக போய் விட்டது. உண்மையில் இந்த வரிகள் இடம் பெற்ற கவிதையை எழுதியவர் வில்லியம் பிளேக் அல்ல, மாறாக, ஆல்பிரட் லார்ட் டென்னிசன் என்பவர்தான் இதை எழுதியுள்ளார்.


The Brook என்ற கவிதையில் இடம் பெற்றுள்ள வரிகள்தான் இவை. அந்தக் கவிதையின் கடைசியில், 


And out again I curve and flow

To join the brimming river,

For men may come and men may go,

But I go on forever.


என்று அது முடியும். எப்படி ஆசிரியரின் பெயரை விஜய் தவறாக சொன்னார் என்று தெரியவில்லை. எதிர்காலத்தில் இதுபோன்ற சறுக்கல்களைத் தவிர்க்க வேண்டும்.