Train Ticket Reservation: முன்பதிவு கால அவகாசம் 60 நாட்களாக குறைப்பு... அதிர்ச்சியில் பயணிகள்!

Aadmika
Oct 17, 2024,05:41 PM IST

டில்லி : ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்க  ரயில்வே திட்டமிட்டுள்ளது. நவம்பர் 01ம் தேதியில் இருந்து இந்த புதிய நடைமுறை அமலுக்கு வர உள்ளது.


ரயில் பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கான டிக்கெட்களை 120 நாட்களுக்கு முன்பே புக் செய்யும் முறை தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. அப்படி புக் செய்ய முடியாதவர்கள், டிக்கெட் கிடைக்காதவர்கள் பயண தேதிக்கு முந்தைய நாள் தட்கல் முறையில் கூடுதல் கட்டணம் செலுத்தி டிக்கெட் புக் செய்து கொள்ளலாம். இது தவிர தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் 160 நாட்களுக்கு முன்பே ரயில் டிக்கெட்களை புக் செய்யும் முறை நடைமுறையில் உள்ளது.




இதனால் பலரும் முன்கூட்டியே டிக்கெட் புக் செய்து விடுவதால் பெரும்பாலானவர்கள் ரயிலில் டிக்கெட் கிடைக்காமல் கடும் அவதி அடைந்து வந்தனர். பயணிகளின் இந்த சிரகமத்தை குறைப்பதற்காக, ரயில் டிக்கெட் முன் கூட்டியே புக் செய்வதற்கான கால அவகாசத்தை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைத்துள்ளது மத்திய ரயில்வே துறை. இந்த புதிய நடைமுறை நவம்பர் 01ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது. 


இந்திய பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு அவகாசம் மட்டும் தான் மாற்றப்பட்டுள்ளதாகவும், அதே சமயம் வெளிநாட்டு பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவிற்கான கால அவகாசம் 365 நாட்கள் என்ற நிலையே தொடரும். அதில் மாற்றமில்லை என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்