ஸ்ரீ ராம நவமி.. ராம பிரானின் அவதார தினம்.. நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே!

Swarnalakshmi
Apr 05, 2025,01:33 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே

தின்மை மையும் பாவமும் சிதைந்து தேயுமே 

ஜென்மமும் மரணமும் இன்றி தீருமே     

இம்மையே ராமா வென  இவ்விரண்டு எழுத்தினால்"


ஸ்ரீ ராமர் காயத்ரி மந்திரம்

"ஓம் தசரதாய வித் மஹே சீதா வல்லபாய தீமஹி தன்னோ ராம பிரசோதயாத்".


ஏப்ரல் -6  , 2025 ஞாயிற்றுக்கிழமை ,அன்று ஸ்ரீ ராமர் அவதரித்ததை கொண்டாடும் புனித நாளாகிய "ஸ்ரீ ராமநவமி" கொண்டாடப்படுகிறது. இந்த நாள்  சைத்ர மாதம்  சுக்ல பக்ஷம் நவமி திதியில் வருகிறது .இது வசந்த நவராத்திரி விழாவில் ஒன்பதாவது நாளாகும்.


ஸ்ரீ ராம நவமி பூஜை நேரங்கள்:




1. மத்தியான முகூர்த்தம்: முற்பகல் 11:0 9 மணி முதல் பிற்பகல் 1:40 மணி வரை.

2. நவமி திதி ஆரம்பம்: ஏப்ரல் 5 மாலை 7.26 மணி துவங்கி, ஏப்ரல் 6 மாலை 7: 22 மணி மணிக்கு நவமி திதி முடிவடைகிறது.


ஸ்ரீ ராம  நவமியின்  முக்கியத்துவம்:


ஸ்ரீ ராமநவமி ஸ்ரீ ராமர் பிறந்த நாளை கொண்டாடும் ஒரு முக்கிய இந்து விழாவாகும். ஸ்ரீ ராமரை குழந்தை வடிவில் வழிபட்டு தாலாட்டுவது, போன்ற நிகழ்வுகள் நடைபெறும் .இந்த நாளில் பக்தர்கள் விரதம் இருப்பது ராமாயணம் பாராயணம் செய்வது ,மற்றும் ஸ்ரீ ராமர் மீது பக்தி பாடல்கள் பாடுவது போன்ற வழிபாடுகளில் ஈடுபடுகின்றனர்.


விழா கொண்டாட்டங்கள்:


இந்த நாளில் ஸ்ரீராமர், சீதாதேவி ,லட்சுமணர் மற்றும் ஹனுமான் ஆகியோரின் ரத யாத்திரைகள் பல இடங்களில் நடத்தப்படுகின்றன. அயோத்தியாவில் பக்தர்கள் சரயு நதியில் புனித நீராடி ஸ்ரீ ராமர் கோவிலில் வழிபாடு செய்கின்றனர். சிலர் உபவாசம் இருந்து ராமர் பஜனை பாடல்கள் பாடுவர். ராமநவமி அன்று விரதம் இருந்து ராம நாமம் உச்சரித்தால் ராமரின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம் .ராமாயண கதை ராமரின் புகழை போற்றும் கதைகளையும் படிப்பதும், கேட்பதும் நன்மை அளிக்கும் .108 அல்லது  100 8 என்ற கணக்கில்    "ஸ்ரீ ராம ஜெயம்" எழுதுவது சாலச்சிறந்தது .ஸ்ரீ ராம நாமத்தை இடைவிடாத ஜெபித்துக் கொண்டே இருப்பது அதிக நன்மை பயக்கும்.


இந்த புனித நன்னாளில் பக்தர்கள் ஸ்ரீ ராமரை நினைவு கூர்ந்து  அவரின் வாழ்க்கை மற்றும் பண்புகள் தர்மத்தின் மீது அவரின் நிலைப்பாட்டை நினைவு கூறும் வகையில் ஸ்ரீ  ராம நவமி யை கொண்டாடி மகிழ்வோம்.


"ஹரே ராம ஹரே ராம ஹரே ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண ஹரே ஹரே"

"ஸ்ரீ ராமா ராம  ராமேதி  ரமே ராமே மனோரமே சகஸ்ரநாம தத்துல்யம்  ராம நாம வரானனே"