கவர்னரையே மிரள வைத்த "தக்காளி".. லிஸ்ட்டை விட்டு தூக்குங்க முதல்ல!!

Aadmika
Aug 04, 2023,10:52 AM IST
சண்டிகர் : தக்காளி விலை தொடர்ந்து ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்வதால் ராஜ்பவனில் தயாரிக்கும் உணவுகளில் இனி தக்காளி பயன்பாட்டை குறைக்கும்படி பஞ்சாப் கவர்னர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார்.

நாடு முழுவதும் தொடர்ந்து தக்காளி விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.200 ஐ கடந்துள்ளது. இதனால் ராஜ்பவன் மெனுவில் இனி தக்காளி உபயோகத்தை குறைக்கும் படி தெரிவித்துள்ளார். அதோடு மக்களும் தக்காளி உபயோகிப்பதை குறைத்து, அதற்கு மாற்றத்தை தேட வேண்டும். இவ்வாறு செய்தால் தக்காளி விலை தானாக குறையும் என தெரிவித்துள்ளார்.



உணவு பொருட்களின் விலை ஏற்றம் மக்களிடம் எந்த வகையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதை மக்களிடம் கேட்டறிந்தார். அதற்கு பிறகு பேசிய அவர், தக்காளி பயன்பாட்டை குறைக்க வேண்டும் அல்லது நிறுத்த வேண்டும். தேவை குறையும் போது தானா விலை குறைந்து விடும். மக்கள் தக்காளிக்கு மாற்றான விஷயங்களை நாடலாம் என்றார். 

மேலும் தக்காளி விலை உயர்ந்துள்ளது என்றால் மக்கள் அதை வீட்டிலேயே விளைய வைக்கலாம். தக்காளிக்கு பதிலாக எலுமிச்சையை பயன்படுத்தலாம். யாருமே தக்காளி சாப்பிடவில்லை என்றால், வாங்குவதற்கு ஆள் இருக்க மாட்டார்கள். இதனால் விலை தன்னால் குறைந்து விடும். எந்த ஒரு பொரும் விலை உயர்கிறதோ அதற்கு மாற்றை தேடினாலே அந்த பொருளின் விலை குறைந்து விடும் என்றார்.

தமிழ்நாட்டில் எச். ராஜா, உத்தரப் பிரதேச பெண் அமைச்சர் ஒருவர் ஆகியோரும் ஏற்கனவே தக்காளியை பயன்படுத்தாமல் விட்டாலே விலை தானாக குறையும் என்று கூறியிருந்தனர். இந்த வரிசையில் தற்போது ஆளுநர் பன்வாரிலாலும் தக்காளி பயன்பாட்டைக் குறைக்குமாறு கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.