பிப்ரவரி 09 - இன்று என்ன செய்து, யாரை வழிபட்டால் நன்மை நடக்கும்?
Feb 09, 2023,11:31 AM IST
இன்று பிப்ரவரி 09 - தை 26 வியாழக்கிழமை. சங்கடங்கள் தீர விநாயகரை வழிபட வேண்டிய சங்கடஹர சதுர்த்தி. மேல்நோக்கு நாள் என்பதால் பூமிக்கு மேல் செய்யக் கூடிய பூமி பூஜை செய்ய, வீடு கட்ட துவங்குவதற்கு போன்றவற்றிற்கு உகந்த நாளாகும்.
இன்று அதிகாலை 05.43 வரை திரிதியை திதியும், அதற்கு பிறகு சதுர்த்தி திதியும் நீடிக்கிறது. இன்று இரவு 09.26 வரை உத்திரம் நட்சத்திரமும், பின்பு அஸ்தம் நட்சத்திரம் வருகிறது.
காலை 06.35 வரை அமிர்தயோகமும், பின்பு இரவு 09.26 வரை மரணயோகமும், பின்பு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை ----
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் :
பகல் 01.30 முதல் 03.00 மணி வைர
எமகண்டம் :
காலை 06.00 முதல் 07.30 வரை
இன்று என்ன செய்யலாம் ?
கற்கள் தொடர்பான பணிகைள செய்ய, நீர்நிலைகள் சார்ந்த பணிகள் செய்ய, விவசாயம் சார்ந்த பணிகள் செய்ய, தோட்டம் அமைக்க சிறப்பான நாள்.
யாரை வழிபட வேண்டும்?
விநாயகரை வழிபட காரியத் தடைகள் நீங்கும்.