ஆகஸ்ட் 27 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
இன்று ஆகஸ்ட் 27, செவ்வாய்கிழமை
குரோதி ஆண்டு, ஆவணி 11
தேய்பிறை, மேல் நோக்கு நாள்
இன்று காலை 07.30 வரை அஷ்டமி திதியும், அதற்கு பிறகு நவமி திதியும் உள்ளது. இரவு 08.54 வரை ரோகிணி நட்சத்திரமும், அதற்கு பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. இன்று காலை 08.54 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
சுவாதி, விசாகம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
கணிதம் பயிலுவதற்கு, கிணறு வெட்டுவதற்கு, வாகனம் வாங்குவதற்கு, கால்நடைகள் வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
முருகப் பெருமானை வழிபட காரிய தடைகள் விலகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்