பிப்ரவரி 11  இன்று என்ன காரியம் செய்யலாம்..  யாரை வழிபட நல்லது நடக்கும்?

Aadmika
Feb 11, 2023,09:24 AM IST

இன்று பிப்ரவரி 11 - தை 28 சனிக்கிழமை. தேய்பிறை சஷ்டி. சமநோக்கு நாள்


காலை 06.37 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் அமைகிறது.


இன்று இரவு 10.56 வரை சித்திரை பின்பு சுவாதி நட்சத்திரம். காலை 06.35 வரை சித்தயோகமும் பிறகு இரவு 10.56 வரை மரணயோகமும், அதற்கு பின்பு அமிர்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


எமகண்டம் :


பகல் 01.30 முதல் 03.00 வரை


என்ன செய்ய ஏற்ற நாள்?


மந்திர உபதேசம் பெறுவதற்கு, அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்ற, முன்னோர்களை வழிபடுவதற்கு, விவசாய பணிகளை மேற்கொள்ள நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும்?


தேய்பிறை சஷ்டி என்பதனால் முருகப் பெருமானை வழிபட சுபிட்சம் உண்டாகும். எந்த வினையானாலும் கந்தனை வழிபட்டால் சூரியனை கண்ட பனி போல் விலகி விடும்.