"சுடிதார் அணிந்து".. ஹலோ பாஸ் கொஞ்சம் ஓரமா போங்க..  இன்னிக்கு "என்ன நாள்" தெரியுமா?

Meenakshi
Dec 21, 2023,02:10 PM IST

சென்னை:  சுடிதார், சல்வார், மிடி, மினி, மேக்ஸி..  இன்னும் என்னெல்லாம் இருக்கோ.. எல்லாத்தையும் வரிசையா எடுத்து வைங்க.. எங்க சைட்ல இருந்து நாங்க ஒன்னே ஒன்னை மட்டும்தான் எடுத்து வைப்போம்.. அதுதான் சேலை.. இப்ப சொல்லுங்க எது பெஸ்ட்.. சேலைக்கு முன்னாடிக்கு எதுவுமே நிக்க முடியாதுங்க.. ஏன்னா.. சேலைன்னாலே தனி மவுசுதான்!


இன்று சர்வதேச சேலை தினம்.. சும்மாவே சேலையில் விதம் விதமாக ஜொலிப்பவர்கள் பெண்கள்.. சேலை நாளில் சும்மா இருக்க முடியுமா...!




சேலை என்றாலே பெண்களுக்கு மட்டுமல்ல.. ஆண்களுக்கும் கூட ரொம்பவே பிடிக்கும். பெண்கள் எந்த உடை போட்டாலும் அழகு என்று சொன்னாலும் சேலை கட்டினால் தான் பெரும்பாலான ஆண்களுக்கு பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பே செல்லியிருக்கு. இது உண்மையா இல்லையானு அவங்க அவங்க மனச கேட்டு பாத்துக்கோங்க. ஏன்னா மனசு தான் பொய் சொல்லாது. 


இன்னக்கி என்ன தான் மாடன் உடைகள் ஏகப்பட்டது வந்தாலும், பெரும்பாலான பெண்களுக்கு பிடித்த உடை என்றால் அது சேலை தான். சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு என்று பாட்டே பாடி வச்சிருக்காங்க நம்மாளுங்க.. இன்னும் கொஞ்சம் பேர் சேலையில வீடு கட்டவான்னு அடுத்த லெவலுக்கு மாறியதையும் நாம பார்த்திருக்கோம்.




அது மட்டும் காரணம் இல்லைங்க.. சேலை என்பது டிரடிஷன், நமது பாரம்பரியம்.. நமது பெண்களின் அழகுக்கு பாந்தமான உடை சேலை மட்டுமே..  இப்படிப்பட்ட பாரம்பரிய உடையை விடுத்து பெண்கள் தங்கள் பணி, சவுகரியம் காரணமாக பல மாடன் உடைகளை அணிந்து வலம் வருகின்றனர். ஆனால் அப்படி மாடன் உடை அணிந்து வலம் வருபவர்கள் கூட, தீபாவளி, பொங்கல் என்றால் அவர்களது முதல் சாய்ஸே சேலைதான். ஏன் கோவிலுக்கு செல்லும் போதும், திருமணம், விழாக்காலங்கள், முக்கிய விசேசங்கள் போன்ற எல்லாவற்றிற்கும் சேலை தான் பெஸ்ட். அது மட்டும் இல்லைங்க பண்டிகை காலங்களில் சேலை கட்டினால் தான் "இன்னக்கி பண்டிகை"ன்னே உணரும் பெண்களும் உண்டு.


வெளிநாட்டு பெண்கள் இங்க வந்தாலும் அவர்களது முதல் ஆச்சரியம் நாம கட்டும் சேலை தான். இந்திய பெண்கள் வெளிநாட்டுக்கு போனாலும் சேலை தான். இப்படி பட்ட சேலை ரகங்கள் ஒன்றா? ரெண்டா... அப்பப்பா சொல்லி மாள முடியாது. இருந்தாலும் செல்றேன் கேட்டுக்கோங்க... பட்டுச் சேலைன்னு எடுத்தாலே பெரிய லிஸ்ட்டே இருக்கும்.. காஞ்சி பட்டு, பணாரஸ் பட்டு, சாடின் சேலை, ஜார்ஜெட் புடவை, சிஃப்பான் புடவை, ஆர்கன்சா புடவை, சாதேரி சில்க், ஜம்தானி சேலை, மங்களகிரி காட்டன் சேலை, டஸ்ஸர் பட்டுப் புடவை, ஷிபோரி சேலை, லெஹ்ரியா சேலை, ரா சில்க், காட்டன் சில்க், டஸ்ஸர் சில்க், ஆர்கன்ஸா, டிசைனர் காட்டன், பிரின்டட் புடவைகள்... இப்படியே சொல்லிட்டுப் போகலாம்.. எழுதுற எனக்கு மூச்சு முட்டுதோ இல்லையோ.. படிக்கிற உங்களுக்கு நாக்குத் தள்ளிரும்.. அதனால இத்தோட நிறுத்திக்குவோம்!


பெண்கள் அணியும் புடவையில் அழகு இருப்பதை விட அவர்கள் சேலை கட்டும் விதத்தில் தான் அழகு இருக்கிறது என்று செல்லலாம். பெண்கள் சேலை அணியும் விதமே அவர்களின் தோற்றத்தையே மாற்றி அமைக்கிறது. குண்டான உடல்வாகு கொண்ட பெண்கள், ஒல்லியான பெண்கள், மீடியம் ஆன பெண்கள், கருப்பான பெண்கள், கலரான பெண்கள், மாநிற பெண்கள் என பெண்களின் உயரம், உடல் தோற்றம் ஆகியவற்றிற்கு ஏற்றார் போல் புடவை அணிந்தால் அது மிகவும் அழாக இருக்கும். புடவையை பற்றி  சொல்லிட்டே போகலாம்!




ஹலோ ஆண்களே.. என்ன ரொம்ப நேரமா பலமா யோசிக்கறீங்க போல..  புடவைக்கெல்லாம் ஒரு டே இருக்கு... எங்களுக்கு எந்த டேயும் இல்லைனு கேக்கறது கேக்குது பாஸ்... கவலையை விடுங்க.. உங்களுக்காகவே.. ஜனவரி 6ம் தேதி வெயிட்டிங்ல இருக்கு.. அதாங்க "வேட்டி தினம்".. இன்னிக்கே வேட்டியை எடுக்கறீங்க.. கட்றீங்க.. அசத்தறீங்க.. அப்படியே உங்க வீட்டுக்காரம்மாவுக்கும் அழகா ஒரு பட்டுப் புடவை எடுத்துக் கொடுத்துருங்க .. (உங்க நல்லதுக்குத்தான் சொல்றோம்) .. ஓகேவா!