சர்வதேச புரத தினம் (World protein day).. இன்று முதல் இதெல்லாம் மறக்காம சாப்பிடுங்க.. ஓகேவா!
- ஸ்வர்ணலட்சுமி
சர்வதேச புரத தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. புரத உணவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் உட்கொள்ள வேண்டிய உணவு புரதம் நிறைந்த உணவாகும். புரதம் அதிகம் உள்ள உணவை உட்கொண்டால் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் கிடைக்கும். ஆனால் நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் புரதம் அதிகம் இருப்பதில்லை. இதற்கான ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவே சர்வதேச புரத தினம் கொண்டாடப்படுகிறது.
புரத தினத்தின் வரலாறு:
புரதத்தை பற்றிய முதல் குறிப்பு 1838 இல் டச்சு வேதியியலாளர் ஜெரார்டஸ் ஜோஹன்னாஸ் முல்டர் முதன் முறையாக புரதங்களை பற்றி விவரித்தார். 1956 ஆம் ஆண்டு புரதத்தின் அணு அமைப்பு கண்டுபிடிக்கப்பட்டது. 1980ல் எடை இழப்பு மற்றும் தசை அதிகரிப்பு நன்மைக்காக பிரபலம் ஆனது.
2010ல் புரதச்சத்துக்களின் விநியோகம் மற்றும் தேவைகளின் ஒரு எழுச்சி ஏற்பட்டது. பின்னர் 2018 ஆம் ஆண்டு முதல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேசிய புரத தினம் கொண்டாடப்பட்டது. இது ரைட் டு ப்ரோட்டீன் என்ற இயக்கத்தின் ஒரு பகுதியாக 2020 ஆம் ஆண்டு முதல் அனுசரிக்கப்படுகிறது. புரத உட்கொள்ளல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அமெரிக்க சோயாபீன் ஏற்றுமதி கவுன்சிலால் தொடங்கப்பட்டது.
புரத சத்தின் முக்கியத்துவம்:
புரதம்- மேக்ரோ நியூட்ரியன்ட உடலின் ஒரு கட்டுமான பொருளாகும். நோய் எதிர்ப்பு சக்தி, தசை வளர்ச்சி ,எலும்பு ஆரோக்கியம் ,திசுக்கள், ஹார்மோன்களுக்கு மற்றும் நொதிகளுக்கு நன்மை பயக்கும். சர்வதேச புரத தினம் புரதம் உட்கொள்ளும் முக்கியத்துவத்தை மக்களுக்கு கற்பிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
புரதம் அதிகம் உள்ள உணவுகள்:
- பருப்பு வகைகள்
- முளைகட்டிய பயறு வகைகள்
- ட்ரை நட்ஸ் பாதாம் பிஸ்தா போன்றவை
- முட்டை, பால், ப்ரோக்கோலி, காலிஃப்ளவர்
- மீன் ,கோழி இறைச்சி
- சோயா, பொருட்கள், பன்னீர், tofu அவகோடா, கீரை வகைகள், பீன்ஸ், பச்சை பட்டாணி, நாட்டுக்கடலை போன்றவை ஆகும்.
நம் அன்றாட வாழ்க்கை முறையில் தினசரி இந்த உணவில் ஐந்தாவது இடம்பெற வேண்டும். அதனை சரியான அளவில் எடுத்துக்கொண்டு ஆரோக்கியத்துடனும், நலமுடனும் வாழ்வோமாக.