உலக தோசை தினம் 2025.. தோசையம்மா தோசை.. அம்மா சுட்ட தோசை.. என்னென்ன வகை இருக்கு தெரியுமா?

Swarnalakshmi
Mar 03, 2025,03:04 PM IST

- ஸ்வர்ணலட்சுமி


நீங்க தோசைப் பிரியரா இல்லை வெறியரா.. அப்படீன்னா முதல்ல கையைக் குடுங்க பாஸ்.. இன்னிக்கு உலக தோசை தினம் வேர்ல்ட் தோசை டே (world dosa day) மார்ச் மாதம் மூன்றாம் தேதி கொண்டாடப்படுகிறது.


தோசையை விரும்பாதவர் எவரேனும் உண்டோ? குழந்தைகள் முதல் பெரியவர் வரை அதிகம் விரும்பும் உணவு யாதெனில் அது தோசை. காலை உணவில் இந்திய உணவு வகைகளில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்துள்ளது இந்த தோசை தான்.


தோசையின் தலைநகரம் என்று சொல்லப்படுவது பெங்களூரு. ஆனாலும் ஒவ்வொரு தென்னிந்தியரும் விரும்பி உண்ணும் உணவு பட்டியலில் இடம்பெறுவது இந்த தோசை. ஆந்திராவில் பெசரட்டு பச்சைப்பயிறு சேர்த்து தோசை வார்ப்பது மிகவும் சுவைமிக்கதாக இருக்கும். தமிழ்நாட்டிலோ விதம் விதமான தோசைகளை சுட்டுத் தள்ளுகிறார்கள் நம்மவர்கள்.


இந்தியர்களின் உணவு பட்டியலில் ஒரு பிரபலமான காலை சிற்றுண்டி உணவின் பெயரைச் சொன்னால் முதலிடத்தில் இருப்பது இந்த பான் கேக் புளித்த அரிசி மற்றும் உளுந்து சேர்த்து அரைத்த மாவில் தயாரிக்கப்படும் தோசை தான். தோசையின் வசீகரமும் அதன் சுவையும் அனைத்தையும் மீறுகிறது என்பதை நிரூபிக்க மார்ச் மூன்றாம் தேதி உலக தோசை தினமாக கொண்டாடப்படுகிறது.


தோசையை அரிசி பான் கேக் என்று கூறுவர். கி.பி .1 126 ஆம் ஆண்டில் கர்நாடகாவை ஆண்ட சாளுக்கிய மன்னர் மூன்றாம் சோமேஸ்வரர் பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தனது சமஸ்கிருத கலைக்களஞ்சியமான  'மன சோலாசா 'என்ற புத்தகத்தில் தோசை செய்யும் செய் முறையை விவரித்தார் .அவர் அதனை 'தோசகா 'என்று குறிப்பிட்டு இருந்தார் என்ற ஒரு கூற்று உள்ளது.


தோசை செய்முறை:




இட்லி அரிசி அல்லது புழுங்கல் அரிசி ரெண்டு கப் ,பச்சரிசி 1 1/2 கப், உளுத்தம் பருப்பு ஒரு கப், வெந்தயம் ஒரு ஸ்பூன் சேர்த்து கழுவி 5 மணி நேரம் ஊறவைத்து அரைத்து உப்பு போட்டு கலந்த கலவையை புளிக்கச் செய்து அது பொங்கி வந்ததும் தோசை கல்லில் மாவை ஊற்றி எண்ணெய் ஊற்றி தோசை வார்த்து சாம்பார், சட்னி வகைகள், அவியல், குருமா ,நான்வெஜ் குழம்பு என எந்த சைடு டிஷ் இருந்தாலும் சாப்பிட அருமையாகவும் அமிர்தமாகவும் இருக்கும்.


தோசையின் வகைகள்:


கல் தோசை, பலவகை பொடி தோசை, ஆனியன் தோசை, நெய் பிளைன் ரோஸ்ட், மசால் தோசை, நான் வெஜ் எஸ்சென்ஸ் தோசை, வெந்தய தோசை, கேரட் தோசை, பீட்ரூட் தோசை, கீரை தோசை, பெசரட்டு எனும் பச்சை பயிறு தோசை, பருப்பு அடை தோசை, சுரைக்காய் தோசை, ராகி தோசை,  பல சிறுதானியங்கள் சேர்த்த தோசை, சாபூதானா எனும் ஜவ்வரிசி சேர்த்த தோசை, ரவா தோசை, ஆப்ப தோசை  என பலவகை  தோசைகள் உள்ளன.


என்ன  பிரண்ட்ஸ் பெயரைக் கேட்டதுமோ சும்மா நாக்கு எச்சில் ஊறுதா.. தோசை பிரியர்களுக்கு இது மிகவும் பிடிக்கும் என நம்புகிறோம். மேலும் தகவலுக்கு தென் தமிழுடன் இணைந்திருங்கள். உங்கள் சு ஸ்வர்ணலட்சுமி.