ஜனவரி 31 - அனைத்து நலன்களையும் தரும் தேய்பிறை சஷ்டி
இன்று ஜனவரி 31, 2024 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, தை 17
கரிநாள், தேய்பிறை, சமநோக்கு நாள்
காலை 09.46 வரை பஞ்சமி திதியும், அதற்கு பிறகு சஷ்டி திதியும் உள்ளது. இரவு 11.16 வரை அஸ்தம் நட்சத்திரமும், அதற்கு பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.35 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு இரவு 11.16 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அவிட்டம், சதயம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
புதிய வேலையில் சேருவதற்கு, வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கு, புதிய பதவிகள் ஏற்ற, சிற்பம் மற்றும் வாஸ்து தொடர்பான காரியங்களை செய்வதற்கு, ஆபரணங்கள் வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபடலாம் ?
தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபடுவதால் சகல நன்மைகளும் ஏற்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - சோதனை
ரிஷபம் - உற்சாகம்
மிதுனம் - ஆக்கம்
கடகம் - வரவு
சிம்மம் - லாபம்
கன்னி - இரக்கம்
துலாம் - போட்டி
விருச்சிகம் - சோகம்
தனுசு - புகழ்
மகரம் - ஆசை
கும்பம் - வெற்றி
மீனம் - நலம்