ஏப்ரல் 14 - இந்த நாளில் என்னென்ன சிறப்புக்கள் உள்ளது என்பதை தெரிஞ்சுக்கலாம் வாங்க

Aadmika
Apr 14, 2023,09:23 AM IST

இன்று ஏப்ரல் 14, வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 01

தமிழ் புத்தாண்டு, உலக சித்தர்கள் தினம்

திருவோணம், நவமி, தேய்பிறை, மேற்நோக்கு நாள்


அதிகாலை 12.30 வரை அஷ்டமி திதியும், பிறகு இரவு 10.02 வரை நவமி திதியும், அதற்கு பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 08.05 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோண நட்சத்திரமும் உள்ளது. காலை 08.05 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது. 


நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 2 முதல் 3 வரை 

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை


என்ன நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற நாள் ?


மரங்கள் நடுவது, கட்டிடம் எழுப்புவது, அபிஷேகங்கள் செய்வதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட செல்வ வளம் பெருகும் ?


திருவோண நட்சத்திரத்தில் வரும் தமிழ் புத்தாண்டு நாள் என்பதால் பெருமாளையும், மகாலட்சுமியையும் துளசி சாற்றி வழிபட சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். வெள்ளிக்கிழமை என்பதால் அம்பிகை வழிபாட்டினை மேற்கொள்வதும் சிறப்பானது.