ஜனவரி 18 - தை மாத வளர்பிறை அஷ்டமி

Aadmika
Jan 18, 2024,09:39 AM IST

இன்று ஜனவரி 18, 2024 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, தை 04

வளர்பிறை அஷ்டமி, சமநோக்கு நாள்


அதிகாலை 03.16 மணி வரை சப்தமி திதியும், அதற்கு பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. ஜனவரி 18ம் தேதி காலை 03.17 துவங்கி, ஜனவரி 19ம் தேதி அதிகாலை 01.26 வரை அஷ்டமி திதியும் உள்ளது. காலை 08.31 வரை ரேவதி நட்சத்திரமும், அதற்கு பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.34 வரை மரணயோகமும், அதற்கு பிறகு காலை 08.31 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் : 


பூரம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்?


தானியங்கள் வாங்க, சாஸ்திர பயிற்சிகள் மேற்கொள்ள, பசு தொழுவத்தை சீரமைக்க, மரக்கன்றுகளை நடுவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


அஷ்டமி திதி என்பதால் பைரவரை வழிபட்டால் எதிரிகள் தொல்லை, கடன் பிரச்சனை நீங்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - அதிர்ஷ்டம்

ரிஷபம் - எச்சரிக்கை

மிதுனம் - ஆர்வம் 

கடகம் - கோபம்

சிம்மம் - தாமதம்

கன்னி - எதிர்ப்பு

துலாம் - குழப்பம்

விருச்சிகம் - நிறைவு

தனுசு - அச்சம்

மகரம் - உற்சாகம்

கும்பம் - உழைப்பு

மீனம் - சாந்தம்