மே 08 - இந்த நாளில் என்ன சிறப்பு ? பஞ்சாங்கம் சொல்லும் பலன்
இன்று மே 08, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 25
சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை, சமநோக்கு நாள்
இரவு 07.43 வரை திரிதியை, பிறகு சதுர்த்தி திதி துவங்குகிறது. இரவு 08.28 வரை கேட்டை நட்சத்திரமும், பிறகு மூலம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.54 வரை மரணயோகமும், பிறகு இரவு 08.28 வரை சித்த யோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.30 முதல் 07.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
இன்று என்ன செய்ய ஏற்ற நாள் ?
கால்வாய் அமைப்பதற்கு, வழக்குகள் தொடர்பான பணிகளை துவங்குவதற்கு, வயலில் உழவு பணி செய்வதற்கு, கால்நடைகளை வாங்க மற்றும் விற்பதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
சித்திரை மாத தேய்பிறையில் வரும் சங்கடஹர சதுர்த்திக்கு ஏகதந்த சங்கடஹர சதுர்த்தி என்று பெயர். இந்த நாளில் விநாயகப் பெருமானை வழிபட்டால் வினைகள் யாவும் தீரும்