ஆகஸ்ட் 04 - சங்கடம் தீர்க்கும் ஆடி மாத சங்கடஹர சதுர்த்தி
இன்று ஆகஸ்ட் 04, 2023 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆடி -19
ஆடி வெள்ளி, சங்கடஹர சதுர்த்தி, தேய்பிறை, மேல்நோக்கு நாள்
மாலை 05.51 வரை திரிதியை திதியும், பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. பகல் 12.14 வரை சதயம் நட்சத்திரமும், பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை -09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.15 முதல் 01.15 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை
குளிகை - காலை 07.30 முதல் 9 வரை
எமகண்டம் - பகல் 3 முதல் 04.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள்?
பழைய கணக்குகளை முடிப்பதற்கு, குதிரை வாங்குவதற்கு, ஆலோசனை கூட்டம் நடத்துவதற்கு, மருத்துவ பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
சங்கடஹர சதுர்த்தி என்பதால் வினைகள் தீர விநாயகப் பெருமானை வழிபட வேண்டிய நாள்.