மார்ச் 24 - இன்னினிக்கு எவ்வளவு விசேஷம் இருக்கு பாருங்க.. பெளர்ணமி, ஹோலி பண்டிகை!
இன்று மார்ச் 24, 2024 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 11
பெளர்ணமி, சுபமுகூர்த்த நாள், மேல் நோக்கு நாள், திருவண்ணாமலை கிரிவலம் நாள்
காலை 11.16 வரை சதுர்த்தசி திதியும், பிறகு பெளர்ணமி திதியும் உள்ளது. மார்ச் 24ம் தேதி காலை 11.17 மணி துவங்கி மார்ச் 25 ம் தேதி பகல் 01.16 வரை பெளர்ணமி திதி உள்ளது. காலை 08.46 வரை பூரம் நட்சத்திரமும், பிறகு உத்திரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 08.46 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 3 முதல் 4 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவோணம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
விதை விதைப்பதற்கு, ஆயுத பயிற்சி மேற்கொள்ள,ஆடை அணிகலன்கள் வாங்க, குளம், கிணறு வெட்டுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பங்குனி பெளர்ணமி என்பதால் குலதெய்வ வழிபாடு குடும்பத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - லாபம்
ரிஷபம் - அச்சம்
மிதுனம் - நலம்
கடகம் - ஆக்கம்
சிம்மம் - மகிழ்ச்சி
கன்னி - நன்மை
துலாம் - பகை
விருச்சிகம் - வரவு
தனுசு - புகழ்
மகரம் - பரிசு
கும்பம் - பரிவு
மீனம் - இன்பம்