பிப்ரவரி 15 - கேட்ட வரங்கள் தரும் மாசி மாத வளர்பிறை சஷ்டி

Aadmika
Feb 15, 2024,10:20 AM IST

இன்று பிப்ரவரி 15, 2024 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, மாசி 03

வளர்பிறை சஷ்டி, சமநோக்கு நாள்


மாலை 04.36 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி  திதியும் உள்ளன. மாலை 03.30 வரை அஸ்வினி நட்சத்திரமும் பிறகு பரணி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.33 வரை மரணயோகமும், பிறகு மாலை 03.30 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் பகல் 07.30 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


பூரம், உத்திரம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


புதிய வேலையில் சேருவதற்கு, வீடு வாங்குவதற்கு, வாகனம் வாங்குவதற்கு, மருத்துவ தொழில் துவங்குவதற்கு, புதிய பதவிகளை ஏற்பதற்கு, சிற்பம் மற்றும் வாஸ்து தொடர்பான காரியங்களை செய்வதற்கு, ஆபரணங்கள் வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


மாசி மாத வளர்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை விரதம் இருந்து வழிபட்டால் வேண்டிய அனைத்தும் கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் :


மேஷம் - லாபம்

ரிஷபம் - சாந்தம்

மிதுனம் - உயர்வு

கடகம் - உற்சாகம்

சிம்மம் - வரவு

கன்னி - பெருமை

துலாம் - இரக்கம்

விருச்சிகம் -  சோர்வு

தனுசு - இன்பம்

மகரம் - பொறுமை

கும்பம் - நன்மை

மீனம் - புகழ்