பிப்ரவரி 24 - பாவங்கள் போக்கி, கோடி புண்ணியம் தரும் மாசி மகம்
இன்று பிப்ரவரி 24, 2024 - வெள்ளிக்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 12
மாசி மகம், பெளர்ணமி, கிரிவலம் செல்ல ஏற்ற நாள், கீழ்நோக்கு நாள்
மாலை 06.51 வரை பெளர்ணமி திதியும், பிறகு பிரதமை திதியும் உள்ளது. பிப்ரவரி 23ம் தேதி மாலை 04.55 முதல் பிப்ரவரி 24ம் தேதி மாலை 06.51 வரை பெளர்ணமி திதி உள்ளது. இரவு 11.05 வரை மகம் நட்சத்திரமும் பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.30 வரை மரணயோகமும், பிறகு இரவு 11.05 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூராடம், உத்திராடம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வழக்கு தொடர்பான பணிகளை செய்வதற்கு, விரதங்களை பூர்த்தி செய்வதற்கு, தானியம் தொடர்பான பணிகளை செய்வதற்கு, ஆபரண பழுதுகளை சரி செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
மாசி மகம் என்பதால் குலதெய்வம் உள்ளிட்ட அனைத்து தெய்வங்களையும், முன்னோர்களையும் வழிபட ஏற்ற சிறப்பான நாளாகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - நலம்
ரிஷபம் - பெருமை
மிதுனம் - புகழ்
கடகம் - தோல்வி
சிம்மம் - உயர்வு
கன்னி - வெற்றி
துலாம் - மகிழ்ச்சி
விருச்சிகம் - இன்பம்
தனுசு - முயற்சி
மகரம் - கவனம்
கும்பம் - அமைதி
மீனம் - அன்பு