ஏப்ரல் 11 - இன்று நல்ல காரியங்கள் செய்யலாமா ?
இன்று ஏப்ரல் 11 செவ்வாய்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 28
தேய்பிறை சஷ்டி, சமநோக்கு நாள்
காலை 06.50 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. பிற்பகல் 12.27 வரை கேட்டை நட்சத்திரம், பிறகு மூலம் நட்சத்திரம் உள்ளது. பிற்பகல் 12.27 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 08.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
இன்று என்னவெல்லாம் நல்ல காரியங்கள் செய்யலாம்?
வாகனங்கள் வாங்குவதற்கு, வீட்டுக்கு தளம் அமைக்க, கால்நடைகள் வாங்க, நிலம் வாங்க, சாலைகள் அமைப்பதற்கு, வாசற்கால் அமைப்பதற்கு நல்ல நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று செவ்வாய்கிழமையும், சஷ்டி திதியும் இணைந்து வருவதால் முருகப் பெருமானை வழிபட சகல நலன்களும் கிடைக்கும்.