இன்னிக்கு என்ன நாள் தெரியுமா?.குட்டீஸ்களுக்காகவே ஒரு சூப்பர் பாட்டு..ரிலீஸ் ஆகிருக்கு கேட்டீங்களா!

Manjula Devi
Mar 14, 2024,01:03 PM IST

சென்னை: பட்டாம்பூச்சி தினமான இன்று (மார்ச் 14ஆம் தேதி) குழந்தைகளுக்கான பட்டாம்பூச்சி பாடல் யூட்யூபில் ரிலீஸ் ஆகி உள்ளது. 


இந்தப் பாடலுக்கு பாப்ஃபூகன் இசையமைத்துள்ளார். இந்த பாடல் வரிகளை மதன் கார்த்தி எழுத, ஜான் ஸ்டெஃபானி பாடி அசத்தியுள்ளார். சந்தோஷமான குழந்தை பருவத்தில் ஒரு சிறுமி தன்னையே சோலையாக்கி ஒரு பட்டாம்பூச்சியை விளையாட வரும்படி அழைக்கிறாள். குழந்தைகளின் உலகில் பட்டாம்பூச்சியின் வருகை எத்தனை அழகை கூட்டும் என்பதை இப்பட்டாம்பூச்சி பாடல் உணர்த்துகிறது.




பட்டாம்பூச்சியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. அதிலும் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் வண்ணமயமான பட்டாம்பூச்சிகள் பல உண்டு. அவை நம் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. அதனை நாம் பார்க்கும் போது நம் மனதில் ஏதோ இனம் புரியாத சந்தோஷம் ஏற்படுகிறது. குறிப்பாக குழந்தைகள் பட்டாம்பூச்சிகளை பார்க்கும் போது அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து அதனுடன் விளையாட ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்ட பட்டாம்பூச்சி தினம் மார்ச் 14ஆம் தேதியில் கொண்டாடப்படுகிறது. ஏன் கொண்டாடப்படுகிறது தெரியுமா.. வாங்க பார்ப்போம்.


ஓ .. பட்டர்பிளை!


பட்டாம்பூச்சி என்றாலே அழகுதான். பட்டாம்பூச்சிகள் இந்த உலகத்தை அலங்கரிக்கும் அழகான சிறிய வகை உயிரினம். எல்லா வயதினரையும் கவரக்கூடிய வண்ணமயமான மென்மையான உயிரினம். பொதுவாக முட்டையிடும் பருவத்தில் உள்ள பட்டாம்பூச்சிகள் இந்த உலகில் தம் கடமைகள் முடிந்தது என்று முட்டையிட்ட உடனேயே இறந்து விடுமாம். பட்டாம்பூச்சியின் அதிகபட்ச வாழ்நாள் 20 முதல் 40 நாட்கள் வரை வாழுமாம். குறைந்த பட்சமாக 3 முதல் 4 நாட்கள் வரையே வாழுமாம். அப்படிப்பட்ட பட்டாம்பூச்சிகள் இந்த உலகில் பல்வேறு முக்கிய பங்கு வைக்கின்றன.




பட்டாம்பூச்சிகள் நம் தோட்டங்களை அலங்கரிக்கும் என்பதை விட மகரந்த சேர்க்கையில் முக்கியமான பணியை செய்து வருகிறது. தோட்டத்தில் ஏராளமான பூக்கள் இருக்கும். அதில்   பட்டாம்பூச்சிகள்  ஒரு பூவில் வந்து உட்கார்ந்து மற்றொரு பூவில் மகரந்தத்தை பரப்புமாம். அப்படி மகரந்தத்தை பரப்பும் போது தாவர வளர்ச்சி அதிகரிக்குமாம். 


இதன் மூலம் பழங்கள், காய்கறி மற்றும் விதைகளில் உற்பத்தியை அதிகரிக்கும் செயல் திறனை மேம்படுத்துகிறது. இது மட்டுமல்லாமல் இயற்கையோடு இணைந்து பல்லுயிர் பெருக்கத்திற்கு உறுதுணையாக இருக்கிறது. இப்படிப்பட்ட அழகான, வண்ணமயமான, அனைவரையும் கவரக்கூடிய செயல் திறனை கொண்ட பட்டாம்பூச்சிகளை பாதுகாக்க பட்டாம் பூச்சி தினம் அனுசரிக்கப்படுகிறது.


இந்த நாளில் பட்டாம்பூச்சிகளின் வாழ்விட பாதுகாப்பு, சுழற்சிகள் ஆகியவற்றை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே பட்டாம்பூச்சி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.