அச்சச்சோ இன்னிக்கு April 1... கவனமா இருங்க.. இல்லாட்டி ஏமாத்திருவாங்க!

Su.tha Arivalagan
Apr 01, 2024,12:57 PM IST

ஏப்ரல் ஃபூல் டேன்னு சொன்னதும் சிரிப்பா வருதா. கண்டிப்பா சிரிப்பு வரும். ஏன்னா நம்ம அந்த அளவுக்கு நிறைய பேரை ஏமாற்றி இருக்கோம். ஏமாற்றுவதையும் ஏமாறுவதையும் சிரித்துக்கொண்டே ஏற்றுக் கொள்ளும் நாள் ஏப்ரல் ஒன்று தினமாகக் கொண்டாடப்படுகிறது.


ஏப்ரல் 1ஆம் தேதி சொன்னாலே காலையில எந்திரிச்ச உடனே உரக்க பாயிலேயே நம்ம அம்மாவ, அப்பாவ நம்ம கூட பிறந்தவங்க எல்லாத்தையுமே நம்ம ஏமாற்றி இருக்கோம். அதுல ஒரு சந்தோசம் நமக்கு. நான் சின்ன குழந்தையா இருக்கும்போது எங்க அம்மா கிட்ட அம்மா உன்னை அப்பா கூப்பிடுறாங்கனும் அப்பாட்ட போயி அம்மா கூப்பிடுறாங்கன்னும் சொல்லுவேன். கடைசி ஒளிஞ்சு நின்னு பாத்தா ரெண்டு பேரும் மாத்தி மாத்தி நீ தானே  கூப்பிட்ட நீ தானே என்னை கூப்பிட்டேன்னு சொல்லி சண்டை போட்டுட்டிருப்பாங்க. உடனே நான் ஐயோ ஏமாந்துட்டீங்க ஏப்ரல் ஃபூல் அப்படின்னு சொல்லுவேன்.அதுல ஒரு சந்தோசம். 




பிரெண்ட்ஸ் கிட்ட போய் உன் முதுகுல மை இருக்குது உன் சட்டையில் கரி  இருக்கு இப்படி சொல்லி அவர்களை ஏமாற்றுவோம். ஆனா இன்றைய காலகட்டத்தில் அந்த சிறு சந்தோஷத்திற்கு இடமில்லை. ஏப்ரல் 1 ஏப்ரல் ஃபுல் டே என்பதையே மறந்து விட்டோம். நாம் ஒருவரை ஒருவர் முட்டாளாய் ஆக்குவதால் தான் இந்த நாள் முட்டாள் தினம் என்று கொண்டாடப்படுகிறது.


இந்த நாள் எப்படி உருவானது என்பது பற்றி தெளிவான விளக்கம் என்றும் கிடைக்கவில்லை. 1582 ஆம் ஆண்டு போப் ஆண்டவராக இருந்த கிரிகோரி என்பவர் வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு இருந்த நாட்காட்டியை மாற்றி புதிய (கிரிகோரியன்) காலண்டர் என்பதை கொண்டு வந்தார். காலண்டரில் புத்தாண்டு ஜனவரி ஒன்றாம் தேதி ஆக இருந்தது. புதிய புத்தாண்டை ஏற்றுக்கொண்டவர்கள் ஜனவரி ஒன்றாம் தேதி புத்தாண்டு கொண்டாட தொடங்கினார்கள். 


ஏற்றுக்கொள்ளாதவர்கள் ஏப்ரல் ஒன்றாம் தேதியையே புத்தாண்டாக கொண்டாடினார்கள். ஆனால் புதிய தேதியை பின்பற்றுவோர் அதிகமானார்கள், அதனால் பழைய தேதியை பின்பற்றப்படுபவர்கள் முட்டாள்கள் என அழைக்கப்பட்டனர். இதையே ஏப்ரல் ஒன்று முட்டாள் தினம் என்று கூறப் பட்டதற்கு ஒரு காரணமாக சொல்கிறார்கள்.


ஏப்ரல் மாத தொடக்கத்தில் பிரான்சில் உள்ள ஆறுகளில் அதிக அளவு மீன்கள் கிடைக்குமாம். அதனால் அங்குள்ள மக்களுக்கு  மீன் பிடிக்க ரொம்ப வசதியாக இருந்திருக்கிறது. இதையே மீன்கள் ஏமாறும் நாளாகவும் கொண்டாடுகிறார்கள். பிரெஞ்சு குழந்தைகள் கூட காகிதத்தில் மீன் போன்ற செய்து ஒவ்வொருவர் முதுகிலும் ஒட்டி வைப்பர். அப்போது ஒவ்வொருவருடைய முதுகிலும் மீன் இருப்பதை பார்த்து ஏப்ரல் மீன்  என்று கேலி செய்வார்கள்.அவ்வாறாக காலப்போக்கில் மக்களை முட்டாளாக்கும் தினமாகவும் கொண்டாடப்பட்டுள்ளது.


எது எப்படி இருந்தால் என்ன.. ஏமாறாமல் இருப்போம்.. ஏமாற்றுவோரிடம் கவனமாக இருப்போம்.!


கட்டுரை: சந்தனகுமாரி