ஏப்ரல் 20 - இன்று நாள் எப்படி... பஞ்சாங்கம் என்ன சொல்கிறது ?
Apr 20, 2023,09:20 AM IST
இன்று ஏப்ரல் 20, 2023 வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 07
வளர்பிறை, சமநோக்கு நாள்
காலை 10.28 வரை அமாவாசை, பிறகு பிரதமை திதி உள்ளது. அதிகாலை 12.20 வரை ரேவதி நட்சத்திரமும், பிறகு அஸ்வினி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.02 வரை மரணயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம்?
விதை விதைக்க, சித்திரம் வரைய, ஆபரணம் அணிவதற்கு, பொறுப்புகள் வழங்க, புதிய கலைகளை கற்க துவங்க ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும்?
ராகவேந்திரர், ஷீரடி சாய் பாபா போன்ற மகான்களை வழிபட காரியத் தடைகள் விலகும்.