ஏப்ரல் 30 - இன்றைய நாளில் என்ன செய்யலாம் ?

Aadmika
Apr 30, 2023,09:39 AM IST

இன்று ஏப்ரல் 30, 2023 - ஞாயிற்றுக்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 17

வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


இரவு 08.34 வரை தசமி, பிறகு ஏகாதசி திதி உள்ளது. மாலை 03.34 வரை மகம் நட்சத்திரமும், பிறகு பூரம் நட்சத்திரமும் உள்ளது. அதிகாலை 05.58 வரை அமிர்தயோகமும், பிறகு மாலை 03.34 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 03.30 முதல் 04.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


இன்று என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?


வாகனம் பயிற்சி எடுப்பதற்கு, மருத்துவ ஆலோசனைகள் பெறுவதற்கு, ஆன்மிக வழிபாடுகள் மேற்கொள்ள, வழக்கு தொடர்பான பணிகளை செய்வதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


சூரியனை வழிபட்டால் அனைத்து விதமான நலன்களும் கிடைக்கும்.