12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 31, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ம் தேதி, செவ்வாய்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மார்கழி 16 ம் தேதி செவ்வாய்கிழமை
காலை 05.03 வரை அமாவாசை, பிறகு பிரதமை. அதிகாலை 01.12 வரை மூலம், பிறகு பூராடம் நட்சத்திரம் உள்ளது. அதிகாலை 01.12 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 07.45 முதல் 08.45 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 01.45 முதல் 02.45 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை
குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை
சந்திராஷ்டமம் - கிருத்திகை, ரோகிணி
இன்றைய ராசிபலன் :
மேஷம் - உடல்நலம் நன்றாக இருக்கும். பண விஷயத்தில் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது. வேலை பளுவின் காரணமாக சோர்வு ஏற்படலாம். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதில் தெம்பை தரும். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். பழைய பிரச்சனைகள் சிலவற்றிற்கு தீர்வு காண முயற்சி செய்வீர்கள்.
ரிஷபம் - மகிழ்ச்சியான நாளாக இருக்கும். பணத்தை சேமிப்பதில் கவனம் செலுத்துவீர்கள். ஆன்மிக தலங்கள், உறவினர் வீடுகளுக்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். இலக்குகளை எட்ட புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் வாழ்க்கை துணையுடன் கலந்து ஆலோசித்து எடுப்பது நல்லது. கணவன்-மனைவி இடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.
மிதுனம் - மன தைரியம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவுகள் ஏற்படலாம். சிலருக்கு நகை, வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படலாம். யாருக்கும் அவசரப்பட்டு வாக்குறுதிகள் அளிக்க வேண்டாம். உங்களிடம் சிலர் உதவிகள் கேட்டு வரலாம். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நேரத்தை சரியான முறையில் பயன்படுத்துவது முன்னேற்றத்திற்கு உதவும்.
கடகம் - தியானம், யோகா, விளையாட்டு ஆகியவற்றில் மனதின் நாட்டம் அதிகரிக்கும். இன்று அடுத்தடுத்த வேலைகளால் பிஸியாக இருப்பீர்கள். மனதிற்கு பிரியமான சிலவரை சந்திக்க நேரிடலாம். அலுவலகத்தில் ஆதரவான ச6ழல் இருக்கும். வாழ்க்கை துணையுடன் நேரத்தை செலவிட விரும்புவீர்கள்.
சிம்மம் - சில பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். செலவில் அதிக அக்கறை காட்ட வேண்டும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். வாழ்க்கை துணை வழியாக மகிழ்ச்சியான செய்திகளை பெறலாம். மற்றவர்களை தவறாக புரிந்து கொண்டு அதனால் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
கன்னி - காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எதிலும் கவனத்துடன் செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். அனுபவமம் மிக்கவர்களிடம் இருந்து உதவிகள் கிடைக்கலாம். எதிலும் அமைதி காப்பது நல்லது. குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடியவில்லை என மன வருத்தம் அடைவீர்கள். வாழ்க்கை துணையுடன் மனம் விட்டு பேசி, அன்பை பகிர்ந்து கொள்வீர்கள்.
துலாம் - கனவுகள் நனவாகும் நாள். அதிக மகிழ்ச்சியால் சில பிரச்சனைகளும் ஏற்படலாம் என்பதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். பழைய நண்பர் ஒருவரை சந்திக்க நேரிடும். எதிலும் கையெழுத்து இடுவதற்கு முன் சிந்தித்து செயலாற்ற வேண்டும். தொழிலில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும்.வாழ்க்கை துணையுடன் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
விருச்சிகம் - சாதகமான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த நோய்க்கு தீர்வு ஏற்படலாம். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் அனுசரித்து செல்ல வேண்டும். புதிய திட்டங்களை அமல்படுத்த நினைப்பீர்கள். பழைய நண்பர்களை சந்திக்க திட்டமிடுவீர்கள். தம்பதிகள் இடையே அன்பு அதிகரிக்கலாம்.
தனுசு - இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். உடல் நிலை நன்றாக இருக்கும். சிலருக்கு பண வரவு ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்பத்துடன் நேரத்தை செலவிட நினைப்பீர்கள். முயற்சிகளில் வெற்றியும், லாபமும் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். வருமானத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம்.
மகரம் - உணவில் கவனம் செலுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்த வேண்டும். பழைய முதலீடுகள் லாபத்தை தரும். வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சிகள் கிடைக்கலாம். வியாபாரத்தில் புதிய யுக்திகளை தெரிந்து கொள்வீர்கள். மனம் அலை பாய்வதை கட்டுப்படுத்த வேண்டும். நேரத்தை வீணாக செலவிட வேண்டி இருக்கும்.
கும்பம் - மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். தொழிலில் சில ஆலோசனைகளை பெறுவீர்கள். நிதி நிலைமை நன்றாக இருக்கும். முக்கியமான நபர் ஒருவரை சந்திக்க நேரிடும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நன்மையை தரும். சில விஷயங்களை அவசரப்பட்டு செய்து விட்டு பிறகு வருத்தப்படலாம். வாழ்க்கை துணையுடன் மோதல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மீனம் - சில விஷயங்களால் மனம் கவலை அடைவீர்கள். பணத்தை சேமிக்க நினைப்பீர்கள். வீட்டிலும், நண்பர்கள் மத்தியிலும் சகஜமாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். வாழ்க்கை துணையின் ஆதரவு ஆறுதலாக இருக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கை துணை மூலமாக மகிழ்ச்சிகளை அனுபவிப்பீர்கள். மன நிலையிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்