12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 30, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.
2024 ஆம் ஆண்டு டிசம்பர் 30 ம் தேதி, திங்கட்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
இன்றைய பஞ்சாங்கம் :
குரோதி வருடம், மார்கழி 15 ம் தேதி திங்கட்கிழமை
அமாவாசை, அனுமன் ஜெயந்தி. காலை 04.43 வரை சதுர்த்தசி, பிறகு அமாவாசை. காலை 04.44 மணி துவங்கி, டிசம்பர் 31ம் தேதி காலை 05.03 வரை அமாவாசை திதி உள்ளது. அதிகாலை 12.18 வரை கேட்டை, பிறகு மூலம் நட்சத்திரம் உள்ளது. அதிகாலை 12.18 வரை மரணயோகம், பிறகு அமிர்தயோகம் உள்ளது.
நல்ல நேரம்: காலை 6 முதல் 7 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் : காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை
சந்திராஷ்டமம் - பரணி, கிருத்திகை
இன்றைய ராசிபலன் :
மேஷம் - மனக்குழப்பம் ஏற்படலாம். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும். வருமானம் அதிகரிக்கும். பெற்றோரின் உடல்நலனில் அக்கறை காட்ட வேண்டும். குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உறவுகளிடம் அமைதியாக அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தில் ஆதரவு இருக்கும்.
ரிஷபம் - தன்னம்பிக்கை அதிகரிக்கும். இருந்தாலும் எதிலும் பொறுமையாக செயல்பட வேண்டும். தாயாரின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். சேமிப்புக்களை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளதால் செலவுகளில் கவனம் செலுதஅதுங்கள். நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களிடம் உதவி கேட்டு வரலாம். உத்தியோகத்தில் சில தடைகள் ஏற்படலாம்.
மிதுனம் - வீண் கோபத்தை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தை பிரிந்து வேறு இடங்களுக்கு செல்ல வேண்டி இருக்கும். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். செலவுகள் அதிகரிக்கலாம். எதிலும் சிந்தித்து செயல்படுவத நல்லது. தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரலாம். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது.
கடகம் - மனதில் நம்பிக்கை அதிகரிக்கும். படிப்பில் ஆர்வம் பிறக்கும். எழுத்து துறையில் இருப்பவர்களுக்கு மரியாதை கிடைக்கும். வாகன வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். வருமானத்திற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். இருந்தாலும் சிறிது கவனமாக இருக்க வேண்டும். பெற்றொரின் ஆதரவு நிம்மதியை தரும். அனுபவசாலிகளின் யோசனை பெற்று செயல்படுவது நல்லது.
சிம்மம் - கோபத்தை தவிர்க்க வேண்டும். வியாபாரத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பொருளாதாரம், ஆரோக்கியம் இரண்டிலும் கவனமாக இருக்க வேண்டும். தொழிலில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத வேலைகளால் எப்போதும் பரபரப்பாக இருப்பீர்கள். எந்த நிலையிலும் நிதானத்தை இழக்க வேண்டாம்.
கன்னி - மனதில் குழப்பங்கள் தோன்றி மறையும். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். செலவுகளும் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வரும். வெளியூர் பயணங்கள் சென்று வர திட்டமிடுவீர்கள். தேவைகளை பூர்த்தி செய்வதற்கான பணம் வந்து சேரும். கடன்கள் அடையும்.
துலாம் - பேச்சில் இனிமை அதிகரிக்கும் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலில் லாபத்திற்கா வாய்ப்புகள் அமையும். அலுவலகத்தில் ஏற்படும் சவால்களை திறமையுடன் சமாளிப்பீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். செலவுகளில் கவனம் தேவை. தொழிலை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள்.
விருச்சிகம் - மனம் மகிழ்ச்சியாக இருக்கும். உத்தியோகத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு பண வரவு அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டமிடுவீர்கள். கல்வி தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
தனுசு - கோபத்தை தவிர்த்து, எதிலும் நிதானத்துடன் இருக்க வேண்டும். பேச்சுக்களில் கவனம் தேவை. அதிகாரி பதவியில் இருப்பவர்களின் சந்திப்பு நிகழலாம். உத்தியோகத்தில் வேலை பளு அதிகரிக்கும். கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரலாம். மன உறுதியை பாதிக்கும் சம்பவங்கள் நடக்கலாம். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் தேடி வரலாம்.
மகரம் - மனதில் குழப்பம் இருக்கும். எதிலும் கட்டுப்பாடுடன் நடந்து கொள்வது நல்லது. பொறுமையை கடைபிடிக்க வேண்டும். அறிவுபூர்வமான செயல்பாடுகள் மரியாதையை தரும். தொழிலில் பயணங்கள் அதிகரிக்கலாம். பணவரவு ஏற்படும். நீண்ட கால கனவுகளை நினைவேற்ற நினைப்பீர்கள். புதிய சொத்துக்கள் வாங்க திட்டமிடுவீர்கள்.
கும்பம் - மனதில் நிம்மதியும், மகிழ்ச்சியும் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடனான பிரச்சனைகளை பேசி தீர்ப்பது நல்லது. தொழிலில் வெற்றி பெற அதிகம் முயற்சி செய்ய வேண்டி இருக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் பணம் வரலாம்.
மீனம் -மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும் எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். யாருக்கும் பெரிய தொகையை கடனாக கொடுக்க வேண்டாம். உங்களின் மகிழ்ச்சிக்காக பணத்தை செலவிடுவீர்கள். அதே சமயம் செலவுகளில் கவனம் செலுத்த வேண்டும். எதிர்கால முதலீடுகளில் கவனம் செலுத்துவீர்கள்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்