12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் பிப்ரவரி 27, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

vanitha
Feb 27, 2025,10:46 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 ம் தேதி, வியாழக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், மாசி 15 ம் தேதி வியாழக்கிழமை

அமாவாசை. கரிநாள். காலை 109.01 வரை சதுர்த்தசி, பிறகு அமாவாசை திதி உள்ளது . காலை 09.02 முதல் பிப்ரவரி 28 காலை 07.17 வரை அமாவாசை திதி உள்ளது. மாலை 04.07 வரை அவிட்டம் நட்சத்திரமும், பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.28 வரை மரணயோகமும், பிறகு மாலை 04.07 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு மரணயோகமும் உள்ளது.


நல்ல நேரம்: காலை 10.30 முதல் 11.30 வரை; மாலை - கிடையாது

கெளரி நல்ல நேரம் : காலை 12.30 முதல் 01.30 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


சந்திராஷ்டமம் -  புனர்பூசம், பூசம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் -  சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் நன்றாக இருக்கும். மனதை குழப்பிய சில விஷயங்களுக்கு தெளிவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறப்பினர்களிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். செலவுகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.


ரிஷபம் -  நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள் சமூக பணிகளில் மரியாதை உயரும். பணம் கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தம்பதிகளுக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தொழிலில் மாற்றம் ஏற்படலாம். முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும்.


மிதுனம் - இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களால் புதிய வாய்ப்புகள் ஏற்படும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும்.


கடகம் -  குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்த வரவுகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதியவர்களுடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.அலைச்சல்கள் அதிகரிக்கும். 


சிம்மம் - சேமிப்பை அதிகரிக்கும் எண்ணம் அதிகரிக்கும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் வட்டம் விரிவடையும். முயற்சிகள் சாதகமாக முடியும். வழக்குகள் சாதகமாகும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.


கன்னி -  எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். மறைமுக பிரச்சனைகள் நீங்கும்.வழக்குகள் சாதகமாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். குடும்பத்தினரின் ஆதரவு அதிகரிக்கும். வியாபாரத்தில் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும். அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாள். வீடு, மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும்.


துலாம் - தாய்வழி உறவுகளின் ஆதரவு அதிகரிக்கும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேறும். நிலுவையில் இருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பரிசு, பாராட்டுக்கள் கிடைக்கும்.


விருச்சிகம் - எதிர்பாராத செலவுகளால் சேமிப்பு குறையும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நினைத்த காரியங்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விவேகத்துடன் செயல்படுவது நல்ல மாற்றத்தை உண்டாக்கும். புதிய தொழில்நுட்ப கருவிகளை வாங்குவீர்கள். இணையம் தொடர்பான பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும்.


தனுசு - விமர்சன பேச்சுக்களால் செயல்களில் சில மாற்றங்கள் ஏற்படும். தன வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்து வைப்பீர்கள். சிறிய முதலீடுகளால் லாபம் உண்டாகும். புதிய தொழில் துவங்கும் வாய்ப்பு உருவாகும். உத்தியோகத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். கவனம் வேண்டும்.


மகரம் -  எதிர்பார்த்த பணிகள் முடிவடைவதில் தாமதம் ஏற்படும். பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்பட வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். நண்பர்களிடம் தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். சுப காரிய முயற்சிகளில் குலைச்சல்கள் உண்டாகும்.


கும்பம் -   மற்றவர்களிடம் கோபத்தை தவிர்க்க வேண்டும். நிதானமாக செயல்படுவதால் நன்மைகள் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நெருக்கடிகள் உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்ய வேண்டும். வியாபாரத்தில் உழைப்பிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும்.உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும்.


மீனம் - பேச்சுக்களில் நிதானம் வேண்டும். பொழுது போக்கு நிகழ்ச்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர வழியில் அலைச்சல் ஏற்படும். திடீர் பயணங்கள் ஏற்படும். மனதில் கற்பனை தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். சுப செலவுகள் ஏற்படலாம். உரிய நேரத்தில் சில உதவிகள் கிடைக்கும். குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும்.