12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 25, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

vanitha
Dec 25, 2024,09:07 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2024 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ம் தேதி, புதன்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், மார்கழி 10 ம் தேதி புதன்கிழமை

கிறிஸ்துமஸ் பண்டிகை. இன்று இரவு 11.02 வரை தசமி, அதற்கு பிறகு ஏகாதசி. மாலை 04.22 வரை சித்திரை, பிறகு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம்.


நல்ல நேரம்: காலை 09.15 முதல் 10.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை 

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


சந்திராஷ்டமம் -  பூரட்டாதி, உத்திரட்டாதி




இன்றைய ராசிபலன் :


மேஷம் - மாற்றங்கள் நிறைந்த நாளாக இருக்கும். மனதில் எப்போது நேர்மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் முன்னேறுவதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்வதில் கவனம் செலுத்துவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.


ரிஷபம் - தொழில், உடல்நலம், குடும்பம், பொருளாதாரம் என அனைத்து விஷயங்களில் ஆச்சரியப்பட வைக்கும் வகையிலான பல விஷயங்கள் இன்று நடக்கலாம்.  இதன் காரணமாக மனதில் புது விதமான நம்பிக்கை, உற்சாகம் பிறக்கும். 


மிதுனம் - விருந்து உபசாரங்களில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலையை நன்றாக இருக்கும். அதே சமயம் செலவுகளும் அதிகரிக்கும். மன ஆரோக்கியத்தை பாதுகாக்க தியானம் போன்ற பயிற்சிகளை பழகுவது நல்லது.


கடகம் - இன்று பரபரப்பாக காணப்படுவீர்கள். அலுவலகத்தில் வேலை பளு அதிகரிக்கும். வேலைக்காக அதிக நேரம் ஒதுக்குவீர்கள். மனஅழுத்தம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எதிலும் நிதானமான போக்கை கையாண்டு, வாழ்வில் சமநிலையை பேண முயற்சி செய்யுங்கள்.


சிம்மம் - நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். தொழிலில் மாற்றங்கள் ஏற்படலாம். இது எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். வாழ்க்கை துணையுடன் சிறு சண்டை, சச்சரவுகள் ஏற்படலாம். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.


கன்னி - இனிமையான நாளாக இருக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும். சுற்று இருப்பவர்கள் மனதிற்கு இதம் தரும் வகையில் நடந்து கொள்வார்கள். தொழிலில் சில மாற்றங்கள் ஏற்படலாம். மனதில் புது விதமான புத்துணர்ச்சி, தைரியம் ஏற்படும்.


துலாம் - அன்பு நிறைந்த நாளாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வருமானத்திற்கான புதிய வாய்ப்புகள் ஏற்படும். இனிமையான பல அனுபவங்கள் ஏற்படலாம். பணத்தை சேமிக்கும் வழிகளையும், முன்னேற்றத்திற்கான வழிகளையும் தேடுவீர்கள்.


விருச்சிகம் - உடல் நலனில் சோர்வாக உணர்வீர்கள். சற்று கவனமுடன் இருக்க வேண்டும். ஓய்வு அவசியம். வேலை பளு அதிகரிக்கலாம். பிற்பகலுக்கு பிறகு வேலை பளு குறைய துவங்கும். மன அழுத்தம் குறைந்து மனம் லேசானதை போல் உணர்வீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு மனதிற்கு நிம்மதியை தரும்.


தனுசு - வேலைப்பளு குறையும். மனதில் நிம்மதியும், அமைதியும் நிறைந்திருக்கும். வாழ்க்கை துணையுடன் அன்பு அதிகரிக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படலாம். பணம் வருவதற்கான வழிகள் பிறக்கலாம்.


மகரம் - உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். மன அழுத்தத்தில் இருந்து விடுபட புதிய வழிகளை தேடுவீர்கள். பணவு எதிர்பார்த்தப்படி இருக்காது. செலவுகளை குறைக்க முயற்சி செய்ய வேண்டும். பணம் கைக்கு வருவதில் தடைகள் ஏற்படலாம்.


கும்பம் - மன உளைச்சல்களை சந்திக்க நேரிடும். பணம் சம்பாதிப்பதற்கா வழிகளை தேடுவீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உணவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும்.


மீனம் - மன அழுத்தம் அதிகரிக்கலாம். வாடிக்கையாளர்கள் உங்கள் யோசனையில் திருப்தி அடையாமல் இருக்கலாம். இதனால் நிதி நிலையில் குழப்பமான நிலையே காணப்படும். எதிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. யாரையும் நம்பி எந்த காரியத்திலும் ஈடுபட வேண்டாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்