12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - நவம்பர் 24, 2024.. யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

vanitha
Nov 24, 2024,09:30 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2024 ஆம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி, ஞாயிற்றுக்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், கார்த்திகை 09ம் தேதி ஞாயிற்றுக்கிழமை

இன்று நாள் முழுவதும் நவமி திதியும், பூரம் நட்சத்திரமும், சித்தயோகமும் உள்ளது. 


நல்ல நேரம்: காலை - 6 முதல் 7 வரை; மாலை - 03.15 முதல் 04.15 வரை

கெளரி நல்ல நேரம் : காலை 10.45 முதல் 11.45 வரை; மாலை 01.30 முதல் 02.30 வரை

ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் மாலை 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


சந்திராஷ்டமம் - திருவோணம்




இன்றைய ராசிபலன் :


மேஷம் - இன்று எதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சுற்றி இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வாழ்க்கை துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. செலவு அதிகரிக்கலாம். செரிமான பிரச்சனை ஏற்படும் என்பதால் உணவில் கவனம் செலுத்த வேண்டும்.


ரிஷபம் - எதை செய்வதாக இருந்தாலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்யுங்கள். வேலை பளு கூடும். பதற்றமான சூழல் ஏற்படலாம். வீட்டில் உள்ளவர்களை அனுசரி செல்லுங்கள். செலவுகளில் கவனம் தேவை. தாயின் உடல்நலத்தில் அக்கறை தேவை.


மிதுனம் - குடும்ப வளர்ச்சிக்காக குறிப்பிட்ட தொகையை செலவு செய்ய வேண்டி இருக்கும். வளர்ச்சியான நாள். சிறப்பாக பணியாற்றி வெற்றி காண்பீர்கள். புத்துணர்ச்சி ஏற்நடும். பணவரவு அதிகமாக இருக்கும். ஆக்கப்பூர்வமாக செலவுகள் செய்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.


கடகம் - செயல்களில் கவனம் தேவை. எதிலும் கூடுதல் முயற்சி தேவைப்படலாம். பணிகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் கவனமாக இருங்கள். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். கால்களில் வலி ஏற்பட வாய்ப்புள்ளது. 


சிம்மம் - இறை வழிபாடு மனதிற்கு ஆறுதல் தரும். எந்த வேலையையும் குறித்த நேரத்தில் செய்து முடிக்க பாருங்கள்.சுற்று இருப்பவர்களுடன் புரிதல் குறைவாக இருக்கும். உடன் பிறந்தவர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். செலவுகள் அதிகரிக்கும் என்பதால் பண விஷயத்தில் கவனமுடன் இருப்பத நல்லது.


கன்னி - முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். நேர்மறை எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் வளர்த்துக் கொள்ளுங்கள். மற்றவர்களிடம் பேசும் போது வார்த்தைகளை கவனமாக கையாளுங்கள்.அஜீரண கோளாறு, முதுகு வலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள்.


துலாம் - வெற்றிகரமான நாளாக இருக்கும். எதிலும் உறுதியுடனும் சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வாழ்க்கை துணையுடன் நேரத்தை செலவிடுவீர்கள். பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். 


விருச்சிகம் - சிறப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பணியிடத்தில் சிறப்பாக பணியாற்றி, மேலதிகாரியிடம் பாராட்டு வாங்குவீர்கள். சேமிப்பு உயரும். பணவரவு நன்றாக இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். ஆரோக்கியம் நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.


தனுசு - சுமாரான நாள் தான் என்பதால் எந்த ஒரு காரியத்தையும் திட்டமிட்டு செய்வது அவசியம். வாழ்க்கை துணையுடன் வாக்கு வாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. கவனமாக நடந்து கொள்ள வேண்டும். வரவை விட செலவு அதிகமாக இருக்கும். பணப் பற்றாக்குறை ஏற்படலாம். ஆரோக்கியத்திலும் கவனம் வேண்டும்.


மகரம் - எதிர்மறையான எண்ணங்களை தவிர்ப்பது நல்லது. சூழ்நிலைகளை அறிந்து எந்த முடிவையும் எடுப்பது சிறப்பு. செயல்களில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. பண விஷயத்தில் கவனமாக இருங்கள். தலைவலி போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.


கும்பம் - வளர்ச்சி அதிகரிக்கும். உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பணவரவு அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். ஆரோக்கிய நிலை உயரும்.


மீனம் - வெற்றிகரமான நாளாக இருக்கும். பயணங்கள் சாதகமாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தேவைக்கு ஏற்ப பண வரவு இருக்கும். உபரி வருமானங்கள் கிடைக்கும். ஆரோக்கியம் அதிகரிக்கும்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்