12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - டிசம்பர் 23, 2024...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

vanitha
Dec 23, 2024,09:43 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2024 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ம் தேதி, திங்கட்கிழமையான இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம்.


இன்றைய பஞ்சாங்கம் :


குரோதி வருடம், மார்கழி 08 ம் தேதி திங்கட்கிழமை

தேய்பிறை அஷ்டமி. இன்று மாலை 06.48 வரை அஷ்டமி, அதற்கு பிறகு நவமி. காலை 11.17 வரை உத்திரம், பிறகு அஸ்தம். காலை 06.24 வரை அமிர்தயோகம், பிறகு சித்தயோகம்.


நல்ல நேரம்: காலை 06.15 முதல் 07.15 வரை; மாலை - 04.45 முதல் 05.45 வரை

கெளரி நல்ல நேரம் : காலை  09.15 முதல் 10.15 வரை; மாலை 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை 

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


சந்திராஷ்டமம் -  அவிட்டம், சதயம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - நன்மைகள் அதிகம் நிறைந்த நாளாக இருக்கும். திருமண யோகம் கூடி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு இது சாதகமான காலமாகும்.


ரிஷபம் - செலவு வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். மற்றவர்களுடன் பேசும் போது நிதானமான போக்கை கடைபிடிக்க வேண்டும். மன அழுத்தம் அதிகரிக்கலாம். எதிலும் கவனமாக இருக்க வேண்டும்.


மிதுனம் - பண விஷயங்களில் பிரச்சனை ஏற்படலாம். பணத்தை சம்பாதிக்கும் விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையுடன் வாக்குவாதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வெளியூர் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.


கடகம் - பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். மேலதிகாரிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். முதலீடு செய்யும் போது நன்கு யோசித்து செய்வது நன்மைகளை அதிகரிக்க செய்யும்.


சிம்மம் - அலுவலகத்தில் நெருக்கடிகள் குறையும். பூர்வீக சொத்துக்கள் கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குடும்பத்தில் வாழ்க்கை துணை வழியிலான உறவுகளுடன் சுமூகமான போக்கு இருக்கும். வாழ்க்கை துணை வழியில் ஆதரவுகள் கிடைக்கும்.


கன்னி - வேலைகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சாதகமான விஷயங்கள் நடைபெறும். வருமானத்தை பெற புதிய யுக்திகளை கையாள்வீர்கள். தம்பதிகளிடையே ஒற்றமை பாதிக்கப்படலாம். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும்.


துலாம் - குடும்ப விஷயங்களில் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. பணியிடத்தில் உங்களின் பேச்சுக்களுக்கு ஆதரவும், மரியாதையும் அதிகரிக்குள். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாய்ப்புகள் தேடி வரும்.


விருச்சிகம் - உணவு பழக்கங்களில் அக்கறை செலுத்துவது நல்லது. அலுவலக வேலையில் மனம் திருப்தி இல்லாமல் இருக்கும். புதிய திறமைகளை வளர்த்துக் கொள்ளும் எண்ணம் அதிகரிக்கும். மனம் பலவற்றையும் நினைத்து குழப்பத்துடன் காணப்படும்.


தனுசு - சிறப்பான நாளாக இருக்கும். வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்வத நல்லது. எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது.


மகரம் - உங்களின் முடிவுகள் சாதகமான நலன்கள் ஏற்படுது்தும். சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு இது சிறப்பான நாளாக இருக்கும். திறமைகள் கைகொடுக்கும் நாளாக இருக்கும்.


கும்பம் - வாழ்க்கை துணையுடன் அன்பு அதிகரிக்குள். உணவு விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வியாபாரம் லாபம் தருவதாக இருக்கும். அன்பானவர்களின் சந்திப்புகள் நிகழும்.


மீனம் - பெரிய பொறுப்புக்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. செலவுகளில் கவனமாக இருங்கள். இல்லாவிட்டால் கடன் வாங்கு நிலை ஏற்படலாம். தம்பதிகள் இடையே பணம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம். நேர்மறையான சிந்தனைகளை வளர்த்துக் கொள்வது நல்லது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்