12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 23, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

vanitha
Apr 23, 2025,11:37 AM IST

தென்தமிழ்.காம் நேயர்களுக்கு வணக்கம், எந்த நாளும் போல இந்த நாளும் இனிதாகட்டும்.. இன்றைய ராசி பலன்கள், நாள் பலன்கள் மற்றும் பஞ்சாங்கம் குறித்துப் பார்ப்போம்.


2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ம் தேதி, புதன்கிழமை இன்றைய நாளுக்குரிய சிறப்புகள் மற்றும், மேஷம் மற்றும் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான பலன்களை விரிவாக தெரிந்து கொள்ளலாம். 


இன்றைய பஞ்சாங்கம் :


விசுவாவசு வருடம், சித்திரை 10 ம் தேதி புதன்கிழமை

வாஸ்து நாள், சுப முகூர்த்தம். பகல் 12.14 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. இன்று காலை 07.51 வரை அவிட்டம் நட்சத்திரமும் பிறகு சதயம் நட்சத்திரமும் உள்ளது. காலை 05.59 வரை சித்தயோகமும், பிறகு காலை 07.51 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது. 


நல்ல நேரம்: காலை 09.30 முதல் 10.30 வரை; மாலை - 5 முதல் 6 வரை

கெளரி நல்ல நேரம் : 10.30 முதல் 11.30 வரை ; மாலை 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை

குளிகை - காலை 10.30 முதல் 12 வரை

எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை


சந்திராஷ்டமம் -  புனர்பூசம், பூசம்


இன்றைய ராசிபலன் :




மேஷம் - மனதில் நினைத்த காரியம் கைகூடும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் கெளரவம் அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.


ரிஷபம் - மனதில் புதிய சிந்தனைகள் உண்டாகும். குழப்பங்கள் விலகும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். உறவுகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் நட்பு வட்டம் விரிவடையும். கணவன், ணனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள். 


மிதுனம் - மனதில் புதிய தெளிவு ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து செல்லவும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவார்கள். பணியிடத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். சேமிப்புகளில் ஆதாயம் அதிகரிக்கும். வியாபாரத்தில் திருப்பம் ஏற்படும். லாபமான நாள். 


கடகம் - வாழ்க்கை துணையால் வீண் செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த செய்தி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் சில யுக்திகளை அறிவீர்கள். பொழுது போக்கு செயல்களில் கவனம் வேண்டும். கொடுக்கல், வாங்கலில் எச்சரிக்கை தேவை. சமூகத்தில் மதிப்பு உயரும். நிதானம் வேண்டிய நாள்.


சிம்மம் - எதிலும் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஒப்பந்தங்களில் இருந்து வந்த தாமதங்கள் விலகும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். மனதில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். செலவு நிறைந்த நாளாக இருக்கும். 


கன்னி - வியாபாரத்தில் இருந்த நெருக்கடிகள் குறையும். உடன் இருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். ஆரோக்கியம் சிறப்படையும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மறைமுக திறமைகள் வெளிப்படும். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். திறமைகள் வெளிப்படும் நாளாக இருக்கும். 


துலாம் -  குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்குகளில் ஆர்வம் அதிகரிக்கும். பெரிய மனிதர்களின் உதவி கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். பூர்வீக சொத்துக்களில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பீர்கள். சமூக பணிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.


விருச்சிகம் - சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். வாகனங்களால் விரயங்கள் ஏற்படும். உறவுகளிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வரவுகளை அதிகரிப்பதற்கான எண்ணம் தோன்றும். உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். குழப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும். 


தனுசு - சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். மாறுபட்ட அணுகுமுறையால் மாற்றத்தை ஏற்படுத்துவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். அசதி நிறைந்த நாள். 


மகரம் - நண்பர்களுக்குள் இருந்த மனக்கசப்புகள் விலகும். தோற்றப்பொலிவு மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். மனதில் நேர்மறையான சிந்தனை பிறக்கும். வியாபாரத்தில் அனுகூலமான சூழல் உண்டாகும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வெற்றி நிறைந்த நாள்.


கும்பம் -  சந்தேக உணர்வுகளை குறைத்துக் கொள்ளவும். சாலை பயணங்களில் கவனம் வேண்டும். எதிலும் முன் கோபமின்றி செயல்படவும். வியாபாரத்தில் சிந்தித்து செயல்படவும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பொருளாதாரம் சுமாராக இருக்கும். குடும்பத்தில் அனுசரித்து நடக்கவும்.


மீனம் - விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். ஆடம்பர செலவுகளால் சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மறைமுகமான தடைகள் படிப்படியாக குறையும். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். நன்மை நிறைந்த நாளாக இருக்கும்.